ஆர்எஸ்எஸ் பற்றி பேசியதற்காக பத்திரிகையாளர் மீது
வழக்கு அக்., 6ஆம் தேதி உச்சநீதிமன் றத்தில் வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை எறிந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டார். சனாத னத்திற்கு எதிராக பேசியதால் நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்றேன். ஆனால் கடவுள் கூறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என ராகேஷ் கிஷோர் அடாவடியாகப் பேசினார். இது வரை அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு எதி ராக கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் மீது ஆர்எஸ்எஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மூத்த பத்திரிகையாளரான நிகில் வாக்லே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் ஆர்எஸ்எஸ், சனாதனவாதிகள் மற்றும் இந்துத்துவவாதிகள் ஆகியோருடன் தொடர்புடையது” என குற்றம் சாட்டி னார். இந்நிலையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக, சனாதனவாதிகளை பத்திரிகை யாளரான நிகில் வாக்லே அவமதித்து விட்டார். இதுபோன்ற பதிவுகள் மூலம் சமூக அமைதியை சீர்குலைக்கும்” என வழக்கறிஞர் பரிக்சித் மோஹிதே பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அரு
