states

ஒமைக்ரானுக்கு எதிரான ஆண்டிபாடிகளை பூஸ்டர் டோஸ் பெருக்கும் எனத் தகவல்

புதுதில்லி, டிச.9- ஒமைக்ரான் பரவலுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உடலில் பெருக்கும் ஆற்றல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் உள்ளதாக பைசர் மற்றும் பயோன் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி மற்ற மாறுபாடு களுக்கு எதிராக செயல்படக்கூடிய வகையில் உள்ளதாகவும், 3-வது டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிரான ஆண்டிபாடிகளை பெருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  குறித்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள்  தயாராகி உள்ளதாகவும் அடுத்த கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாக வும், அடுத்த நூறு நாட்களுக்குள் மருந்து விநியோகத்திற்கு தயாராகி விடும் என்று பயோன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் தொடர்பாக மருந்து  கட்டுப்பாடு ஆணையத்தின் அனு மதிக்காக காத்திருப்பதாக பயோன் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

;