states

img

இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் முதல்வர் துவக்கி வைத்தார்

“அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இவ்விடத்தில் நாட்டுக்கான ஒற்றுமை பயணத்தை தொடங்குவதில் மிக்க மகிழ்ச்சி. இங்கு (கன்னியாகுமரியில்) பறக்கும் தேசியக்கொடி, ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மதத்திற்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாளம் தான் இந்த தேசியக்கொடி. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எங்களை (காங்கிரஸ்) மிரட்டலாம் என நினைக்கிறார்கள். ஆனால் ஒரு நாளும் நாங்கள் அஞ்சமாட்டோம். இன்று இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. முன்பு இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்படுத்தியது. இன்று மூன்று, நான்கு  பெரிய நிறுவனங்கள் முழு நாட்டையும் கட்டுப்படுத்துகின்றன.” 

- குமரி முனையில் ராகுல் காந்தி பேசியதிலிருந்து...

கன்னியாகுமரி, செப்.7-  கன்னியாகுமரியில் காந்தி மண்ட பத்திலிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்று மை யாத்திரையை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து புத னன்று (செப்.7) மாலை தொடங்கி னார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிர தேசங்கள் வழியாக காஷ்மீர் வரை மொத்தம் 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார். இதற்காக செவ்வாயன்று தில்லி யிலிருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி சென்னை வந்தார். புத னன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினை விடத்தில் மலர் அஞ்சலிசெலுத்தினார்.  பின்னர் சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். பின்னர் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சென்றார். பின்னர்  காமராஜர் மணிமண்டபத்தி லும், காந்தி மண்டபத்திலும் மரி யாதை செலுத்தினார். 

காந்தி மண்டபத்தில் இசை  அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பங்கேற்றார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் பொதுச் செய லாளர் கே.சி.வேணுகோபால், மூத்த  தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் பயணத்தை துவக்கிய இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கிருந்து முடித்துக் கொண்டு நடந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி சென்று தங்கினார். 8 ஆம் தேதி (இன்று) அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், டெரிக் சந்திப்பு வழியாக மக்களைச் சந்தித்து, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்குகிறார். செப்.9 ல் சுங்கான்கடை, புலியூர்குறிச்சி, தக்கலை வழியாக முளகுமூடு செயின்ட் மேரீஸ் பள்ளி சென்று தங்குகிறார். 10 ஆம் தேதி சாமியார்மடம், சிராயன்குழி, மார்த்தாண்டம், குழித்துறை, படந்தா லுமூடு வழியாக செருவாரக்கோணம் சென்று தங்குகிறார். அன்று செப். 11  கேரளாவில் பயணத்தைதொடர்கிறார்.  கன்னியாகுமரியில் பாதயாத்தி ரையை துவக்கிய ராகுல் காந்தி  இம்மாவட்டத்தில் உள்ள களியக்கா விளை வரை சுமார் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்கிறார். இந்த பயணத்தில் அவருடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட 380 பேர் பங்கேற்கிறார்கள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்த ஒற்றுமை இந்தியா நடைபயணம் செல்ல உள்ளது.

;