states

img

ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் பலத்த அடிவாங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!

புதுதில்லி, டிச.20-  இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஒரு வாரமாகவே சரிவைக் கண்டு வரு கின்றன. இந்நிலையில், நடப்பு வர்த் தக வாரத்தின் முதல் நாளான திங்க ளன்றும் கடும் சரிவை, இந்தியப் பங்குச் சந்தைகள் சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தைக் குறி யீடான சென்செக்ஸ் திங்களன்று ஒரே நாளில் 1189.73 புள்ளிகள் வரையும், தேசி யப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி 371 புள்ளிகள் வரையும் சரிந்தது. உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரண மாக, சர்வதேச முதலீட்டுச் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர் கொண்டு வருகிறது. ஏற்கெனவே வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் பணவீக்கம் பிரச்சனையில் சிக்கி யிருக்கும் நிலையில் புதிதாகப் பரவி வரும் ஒமைக்ரான் மீண்டும் வர்த்தகச் சந்தையைப் பாதிக்கும் என்ற அச் சத்தை அதிகரித்துள்ளது.

இதன் எதி ரொலியாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தகச் சந்தை அடி வாங்கிய நிலையில், திங்கட்கிழமை ஆசிய வர்த்தகச் சந்தையும் கடும் அடி வாங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை திங்க ளன்று காலை வர்த்தகத்தில் சுமார் 1300 புள்ளிகள் வரையில் சரிந்து முத லீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அக்டோபர் மாத உச்ச  அளவிலிருந்து சென்செக்ஸ் சரிவு 10 சதவிகிதத்தையும், நிப்டி சரிவு 11 சத விகிதத்தையும் தொட்ட நிலையில், திங்களன்று காலைநேர வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 5 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் சரிவைக் கண்டது. இதே போல மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்க ளின் மொத்த மதிப்பும் 250 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்தது. 

 

;