புதுதில்லி, ஜூன் 19- உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 2021-22ல் 777 மில்லியன் டன்னை எட்டிய நிலையில் தொடர்ந்து நடப்பு நிதியாண்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, மே 31 நிலவரப்படி, 137.85 மில்லியன் டன் ஆகும், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த 104.83 மில்லியன் டன் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 28.6 விழுக்காடு அதிக மாகும். இந்தப் போக்கு ஜூன் மாதத்திலும், பராமரிக்கப் படுகிறது. கோல் இந்தியா லிமி டெட்டின் நிலக்கரி உற்பத்தி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (ஜூன் 16, 2022 அன்று) உற்பத்தியை விட 28விழுக்காடு அதிக மாகும். நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி இலக்கு 911 மில்லியன் டன் ஆகும், இது முந்தைய ஆண்டை விட 17.2 விழுக்காடு அதிகமாகும். உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் ஆண்டில் 8.11 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது, இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலக்கரி இறக்குமதியாகும். உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் காரண மாக மட்டுமே இது சாத்திய மானது. கடந்த ஐந்து ஆண்டு களில், நிலக்கரி அடிப்படை யிலான மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.