states

img

நகர்ப்புற பெண்கள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பு

பொதுமுடக்க காலத்தில் 9 துறைகளில் பல லட்சம் பேர் வேலையிழப்பு!

கொரோனா காரண மாக பொதுமுடக் கம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை உள்ளிட்ட 9 முக்கியத் துறைகளில் ஏராளமானோர் வேலை இழந்திருப் பது புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மக்களவை யில் இதுதொடர்பான புள்ளிவிவரங் களை அளித்துள்ளது.  இதன்படி, கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, அதாவது 2020 மார்ச் 25-க்கு முன்பு உற்பத்தித் துறையில் 98.7 லட்சம் ஆண்களும் 26.7 லட்சம் பெண்களும் பணிபுரிந்து வந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை 2020 ஜூலை 1 அன்று 87.9 லட்சம் ஆண்கள், 23.3 லட்சம் பெண்கள் என்று குறைந்துள்ளது. கட்டுமானத் துறையில், பொது முடக்கத்திற்கு முன்பு 5.8 லட்சம் ஆண்கள் 1.8 லட்சம் பெண்கள் பணிபுரிந்து வந்த நிலையில் 2020 ஜூலை 1 அன்று 5.1 லட்சம் ஆண்களும் 1.5 லட்சம் பெண்களுமே இருந்துள்ளனர். வர்த்தகத் துறை, போக்கு வரத்துத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, சுற்றுலாத் துறை, நிதி, சேவைத் துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் இதே நிலைமையே இருந்துள்ளது.

புதுதில்லி, டிச.1- 15 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கான வேலையின்மை விகிதம் 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் 9.3 சதவிகிதம் அளவிற்கு அதிக ரித்ததாக தேசிய புள்ளியியல் அலு வலகம் (National Statistical Office - NSO) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  கடந்த 2020-ஆம் ஆண்டு இதே ஜனவரி - மார்ச் காலாண்டில் வேலை யின்மை விகிதம் 9.1 சதவிகிதமாக இருந்த நிலையில், அதைக்காட்டி லும் 2021 ஜனவரி - மார்ச் காலாண் டில் வேலையின்மை அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறி யுள்ளது.

குறிப்பாக 15 வயதுக்கு மேற் பட்ட நகர்ப்புறப் பெண்களில் கடந்த 2020 ஜனவரி - மார்ச் காலாண்டில் வேலையின்மை 10.6 சதவிகிதமாக இருந்தது. இதுவும் 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் 11.8 சதவிகி தமாக உயர்ந்துள்ளது. ஆண்களுக்கான வேலை வாய்ப்பின்மையைப் பொறுத்த வரை 8.6 சதவிகிதமாகவே மாற்ற மில்லாமல் தொடர்ந்துள்ளது. அதேபோல 15 வயதுக்கு மேற் பட்ட தொழிலாளர்களில் வேலை பங்கெடுப்பு விகிதமும் நகர்ப்புறங் களில் 47.5 சதவிகிதமாகக் குறைந் துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 48.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேலையின்மை மட்டுமன்றி, வேலையிழப்பும் இந்தியாவில் அதி கரித்து இருக்கிறது. அதுதொடர் பான புள்ளி விவரங்களை அண்மை யில் இந்திய பொருளாதாரக் கண்கா ணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE) வெளியிட்டிருந்தது.

2021 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 15 லட்சம் பேர் வேலையிழப்புக்கு உள்ளானதாக பொருளாதாரக் கண் காணிப்பு மையம் அந்த அறிக்கை யில் தெரிவித்திருந்தது.  குறிப்பாக, விவசாயத் துறை யில் 2021 ஜூலை மாதத்தில் 1.5 கோடி பேர் வேலையிழந்தனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்பு கிராமப்புறப் பகுதியில் அதிகரித் தது என்று கூறிய பொருளாதாரக் கண்காணிப்பு மையம், வேலை யின்மையும் 2021 ஆகஸ்டில் பெரு மளவு அதிகரித்ததாக கூறியிருந்தது.  அதாவது 2021 ஜூலை மாதத்தில் 6.95 சதவிகிதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை ஆகஸ்ட் மாதத்தில் 8.32 சதவிகிதமாக அதிகரித்தது. நகர்ப்புறங்களில் இது 8.3 சதவிகி தத்திலிருந்து 9.78 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 6.34 சதவிகிதத்தி லிருந்து 7.64 சதவிகிதமாகவும் இந்த அதிகரிப்பு இருந்தது. நாட்டில் ஹரி யானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநி லங்கள் இரட்டை இலக்கத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் கொண்டிருக்கின்றன என்றும் சிஎம்ஐஇ கூறியிருந்தது.

;