புதுதில்லி,செப்.13- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்றும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்ற உண்மை யை ஒன்றிய அரசு அலட்சியம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஒன்றிய சுகாதார அமைச்ச கத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடாளுமன்ற நிலைக் குழு சுகாதாரம் குறித்த தனது 137-வது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரோனா தொற்று பாதிப்பின் அதிகரிப்பு சுகாதார கட்டமைப்பின் மீது நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பல கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக வரிசையில் காத்திருந்தது, சிலிண்டர் வேண்டி கெஞ்சியது, மருத்துவமனைகளில் குறைவான நேரத்திற்கே ஆக்ஸிஜன் சப்ளை கையிருப்பு இருந்தது போன்ற பல செய்திகள் ஊடகங் களில் வெளியாகின.
நிலைக்குழு தனது 123-வது அறிக்கையில், மருத்துவ மனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படலாம் என அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்குவதில் தன்னிறைவு அடைந்துள் ளோம் என்று 2020-ல் சுகாதார அமைச்சகம் வழங்கிய உறுதி மொழி குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அது வெற்று உறுதி மொழி என்பது கொரோனா இரண்டாவது அலையின்போது அப்பட்ட மாக வெளிப்பட்டது. மாநிலங்களுக்கிடையே ஆக்ஸிஜன் வழங்கலை நிர்வகிப்பதில் அரசு தோற்றுவிட்ட அதேவேளையில், வானளாவிய ஆக்ஸிஜன் தேவை இந்தபோது, அதன் விநியோகத்தை சீர்படுத்தாதது எதிர்பாராத மருத்துவச் சிக்கலுக்கு வழிவகுத்தது. மருத்துவத் தளவாடங்களின் மோசமான மேலாண்மை, சிக்கல்களுக்கு சுகாதார அமைப்பு விரை வாக பதில் அளிக்காதது போன்றவை இரண்டாம் அலையின்போது அரசாங்கத்தின் தோல்வியை அப்பட்ட மாக வெளிப்படுத்தியது.
ஆக்ஸிஜன் விநியோகம், அதன் உற்பத்தி, ஆக்ஸிஜனு டன் இணைந்த படுக்கைகள், வெண்டிலேட்டர்களின் தேவைகளை பற்றிய மோச மான கண்காணிப்பு அப்போ தைய சூழலை மேலும் மோச மாக்கியது. ஆக்ஸிஜன் பற்றாக குறையால் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு ஒன் றிய அரசு மாநிலங்கள், யூனி யன் பிரதேசங்களை கேட்ட போது, 20 மாநிலங்கள் அளித்த பதிலில் ஆக்ஸிஜன் பற்றாக் குறையால் எந்த மரணங்க ளும் நிகழவில்லை என்று கூறியிருப்பது ஆச்சரியம ளிப்பதாக உள்ளது. சுகாதாரம் -குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை யால் கோவிட் மரணங்கள் நிகழவில்லை என்று கூறி யிருப்பது நிலைக்குழுவை கலக்கமடையச் செய்துள் ளது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை யால் கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என ஊட கங்களில் வெளியான செய்தி கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அரசாங்கம் உண்மையை அலட்சியம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுகா தாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை யால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கணக்கிட வேண் டும். கொரோனா மரணங்கள் குறித்த ஆவணங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.