ஜெனீவா, பிப்.19- உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இன்னும் நோயின் தாக்கம் உள்ள நிலை யில் ஊரடங்கை ஒரேயடியாக முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோ னா பரவல் அதிகரித்தாலும் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடு களை தளர்த்தி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கூறுகையில், வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் கூறுகையில், உலகிலுள்ள 193 நாடுகளில் சில நாடுகள் வைரஸ் தாக்கம் முழு மையாக நீங்கி விட்டதாக நினை த்து ஊரடங்கு கட்டுப்பாடுக ளை முழுமையாக நீக்கி விடு கின்றன. அதன்பின் திடீரென வைரஸ் தாக்கம் அதிகரித் ததை அடுத்து மீண்டும் கட்டுப் பாடுகளை அமல்படுத்து கின்றன. இதற்கு நேர் மாறாக சில நாடுகள் வைரஸ் தாக்கத் தின் அளவை பொருத்து படிப் டியாகவே ஊரடங்கு கட்டுப்பா டுகளை தளர்த்தி வருகின்றன. இந்த முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளனர்.