புதுதில்லி, செப். 20 - “நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை தேவை” என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் கூறியுள்ளார். இந்தியாவில் உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளை, உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்து, அதை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. இந்த பரிந்துரையில் உள்ள நபர்களிலிருந்து சிலரை ஒன்றிய சட்ட அமைச்சகம் தேர்வு செய்து, அந்த பட்டியலை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறது. இறுதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், உச்சநீதிமன்ற கொலீஜியம் மூலம் நீதிபதிகள் தேர்வு செய்யப்படும் முறை தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மறுபுறத்தில், கொலீஜியத்தைத் தவிர்த்து, பாரபட்சமற்ற வகையில் நீதிபதி களை தேர்வு செய்வதற்கு வேறு சரியான ஏற்பாடு என்ன உள்ளது? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் வலியுறுத்தி உள்ளார். “ஊழலை எதிர்கொள்வது: வெளிப்படை யான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை நோக்கி” என்ற தலைப்பில் புவனேஸ்வரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் “நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறல்” என்ற தலைப்பில் மதன் பி லோகுர் உரை யாற்றியுள்ளார். அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற கொலீஜி யமும் ஒரு நபரை பதவி உயர்வுக்கு பரிந்து ரைப்பதற்கு கருத்தில் கொள்ளப்பட்ட காரணி களை பகிரங்கமாக வெளியிடவேண்டும். எனது கருத்துப்படி, கொலீஜியத்தின் கூட்டங்கள், அது உயர் நீதிமன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோ, வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அதாவது விவாதங்கள் நடக்கும்போது கேமிரா இருக்க வேண்டும் என்பது போல் அல்ல, ஆனால் என்ன விவாதங்கள் நடந்தது? என்பது குறித்து பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் சிலரை நியமனத்திற்குப் பரிந்துரை க்கும் போது, அந்த நியமனத்திற்காக கவனத்தில் கொள்ளப்பட்ட காரணிகள் என்ன? அதேபோல ஒருவரை நிராகரிக்கிறோம் என்றால், எதன் அடிப்படையில் அவர் நிராகரிக்கப்பட்டார் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். ‘இவர் நியமிக்கத் தகுதி யற்றவர்’ என்று கூறும்போது, நீங்கள் யாரை நியமித்தீர்கள், ஏன் அவரை நியமிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் வேண்டும். நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்யும் போது, அந்த நபர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என்பதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அது அனைவருக்கும் தெரியும். இன்று அல்லது நாளை அல்லது நாளை மறுநாள் எப்படியும் அது அவர்களுக்கு தெரிந்து விடும். இது ஒரு ரகசியம் அல்ல. வெளிப்படையான ரகசியம் என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி யார் பரிந்துரைக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ‘ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்’ என்ற தனது புத்தகத்தில், தனது நினைவுக் குறிப்புகளில் இருந்து, கொலீஜியம் தொடர்பான சில தகவல் களை வெளியிட்டார்,
ஒருபுறம், கொலீஜியத்தில் நடப்பது ரகசியம், அதைப் பற்றி நீங்கள் எதுவும் தெரிந்து கொள்ளக்கூடாது என்று கூறிவிட்டு, பின்னர் கொலீஜியத்தில் இதுதான் நடந்தது என்று முன்னாள் தலைமை நீதிபதி புத்தகம் எழுது கிறார். இதில் ரகசியம் காக்கும் அம்சம் எங்கே போனது? கொலீஜியத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று அவரை அழைக்கலாமா? துரதிர்ஷ்டவசமாக இந்த வழக்கில் தலைமை நீதிபதி எழுதியது உண்மையில்லை என்பது ஆறுதலானதாகும். அதுபற்றி எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் அந்த நேரத்தில் கொலீஜியத்தில் உறுப்பினராக இருந்தேன். அப்படியானால், ரகசியம், ஒளிபுகாநிலை மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவற்றுக்கு இடையே நீங்கள் எங்கே கோடு போடுகிறீர்கள்? மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏன் மாற்றப்படுகிறார்கள் என்பது தெரி யாது. ஆனால், அதனை அறிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. ஏனென்றால், நாம் சட்டத்தால் ஆளப்படு கிறோம் எனும்போது, நேர்மையான நபர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்; அவர் கள் சரியான தீர்ப்புகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் பிறரைப் புறந்தள்ளி நீதிபதிகள் நியமிக்கப்படும்போதும் இதே நிலைதான் ஏற்படும். ஒரு குடிமகனாக, அதைத் தெரிந்து கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன். எண் 15 நியமிக்கப்படும்போது, எண் 1 முதல் 14 வரை நிராகரிக்கப்பட்டது ஏன்?. எண் 16 முதல் 29 வரை பரிந்துரைக்கப்பட வில்லையே, ஏன்? இதெல்லாம் தகவல் அறியும் உரிமையின் ஒரு அம்சம்.
ழக்கில் தீர்ப்பு வழங்கப் போகும் நபர்கள் யார், மற்றவர்களை விட இவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? அவர்களை விட மூத்தவர்கள், அதிக அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பல சமயங்களில் சிறந்தவர்கள் யார் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? என்பது நமக்குத் தெரிய வேண்டும். குறிப்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அகில் குரேஷி ஏன் பதவி உயர்வு பெறவில்லை? ஏன் அவர், உச்ச நீதி மன்றத்தில் நியமிக்கப்படவில்லை? என்பதை ஒருவர் யூகிக்க முடியும். அதற்கான காரண மும் தெரியும்.
ஆனால், நாம் யூகிக்கும் காரணங்கள் அனைத்தும் வதந்திகளாகவே கருதப் படும். உண்மை என்ன, ஏன் அவர் கவனிக்கப் படவில்லை, ஏன் அவரை விட ஜூனியரை நியமித்தார்கள் என்பது திட்டவட்டமாக நமக்குத் தெரியாது. நீதியரசர் அகில் குரேஷி, சிறந்த நேர்மை, சிறந்த ஞானம் கொண்ட மனிதர். அப்படிப்பட்டவரிடம் இல்லாத சிறந்த அரிய விஷயம் அந்த ஜூனியரிடம் என்ன இருந்தது? - இதற்கு பதில் தேவைப்படுகிறது. நீதிபதி கள் தங்கள் நீதித்துறை முடிவுகளால் விளைவுகளை சந்திக்க வேண்டிய பல நிகழ்வு கள் உள்ளன என்றும் லோகுர் கூறினார். அதேபோல தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி இருந்தார் (நீதிபதி எஸ். முரளிதர்) அவர் ஒரு தீர்ப்பை வழங்கினார். சொல்லப் போனால் தீர்ப்பு கூட இல்லை, அது ஒரு இடைக்கால உத்தரவு. (தில்லி வன்முறையில் 35 உயிர்கள் போயிருக்கும் நிலையில், அதற்கு காரண மானவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்; இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்வீர்கள்; நகரமே பற்றி எரிந்த பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்படுமா?” என்று காவல்துறையிடம் கேள்விகளை எழுப்பினார். வன்முறையைத் தூண்டிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்றார்)
ப்ரவரி 26 அன்று இரவு 11.30 மணிக்கு, அவசர அவசரமாக இடமாற்றம்செய்யப்பட்டார். கொலீஜியத்தின் இரண்டு நீதிபதிகள் சில பரிந்துரைகளில் தலைமை நீதிபதியுடன் மாறுபட்டு அதன் பின்னர் விரைவில் இட மாற்றம் செய்யப்பட்டனர். ‘நான்தான் முடிவு செய்ய வேண்டும், பரிந்துரை செய்ய வேண்டி யது நான்தான், எனவே உங்கள் ஆட்சேபனை களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவும், அதை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புகிறேன்’ என்று தலைமை நீதிபதி கூறினார். சிபாரிசுகள் அனுப்பப்படுவதற்கு முன், உடன்படாத இரண்டு நீதிபதிகளும் பணி யிடமாற்றம் செய்யப்பட்டனர். நீங்கள் செய்த பரிந்துரைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று வாய்மொழியாகச் சொன்ன ஒருவர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், மற்றவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
எனவே, கொலீஜியம் எவ்வாறு செயல்படுகிறது; உண்மையில் கொலீஜியத்தில் என்ன நடக்கிறது, என்பதைக் காட்ட வீடியோ பதிவு தேவையில்லை. ஆனால் அத்தியாவசிய காரணிகள் என்ன என்பதைக் காட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் ஏன் பரிந்துரைக்கப் பட்டார், கருத்தில் கொண்ட காரணிகள் என்ன, இது தகவல் அறியும் உரிமையின் மிக முக்கியமான அம்சமாகும். இவ்வாறு முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் கூறியுள்ளார்.