“மோடி அரசின் 7.5 லட்சம் கோடி ரூபாய் மெகா ஊழல்: சிஏஜி அறிக்கையும் - வகுப்புவாத வெறுப்பு அரசியலும்” எனும் தலைப்பில் வியாழனன்று (அக்.19) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ‘பிணங்களுக்கு மருத்துவம் பார்த்த மோடியின் ஆயுஷ்மான் பாரத்’, - ‘மோடி ஆட்சி: சுருங்கும் வருமானம் உயரும் விலைவாசி’, ‘மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல்’ ஆகிய 3 நூல்களை பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன், பேரா.வி.பி.ஆத்ரேயா, மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.