states

img

பீகார் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக சிபிஎம் போராட்டம்

பீகார் பாஜக கூட்டணி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அராரியா மாவட்டத்தில் உள்ள பர்பிஸ்கஞ்ச் பகுதியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. முன்னதாக பேரணி அணிவகுப்பு நடந்தது.  சிபிஎம் பீகார் மாநிலக் குழு உறுப்பினர் ராம்பாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அராரியா மாவட்டச் செயலாளர் ராம்வினாய் ராய்,  சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.