வங்கத்தில் சிபிஎம் போர்முரசு
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் பிரத மர் மோடி பங்கேற்ற பேரணிக் குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகை யில், சிலிகுரியில் சனியன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் ஆவே சமாக உரையாற்றினார். பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சி களும் மக்கள் நலனுக்கு துரோகம் செய்து, ஒரு ரகசியக் கூட்டணியுடன் செயல்படுவதாக அவர் ஆதாரங்களு டன் அம்பலப்படுத்தினார். பாஜக - திரிணாமுல்: திரைமறைவுத் துரோகம் சிலிகுரியில் திரண்டிருந்த பல்லாயி ரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய முகமது சலீம், “பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸும் பொதுவெளியில் மோதிக் கொள்வது போல ஒரு மாயையை உரு வாக்குகின்றன. ஆனால் உண்மையில் இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். சாரதா, நாரதா மற்றும் ஆசிரியர் பணி நியமன ஊழல் போன்ற வழக்குகளில் சிக்கியுள்ள திரிணாமுல் தலைவர்கள் மீது மத்தியப் புலனாய்வு முகமைகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது ஏன்? இதுவே மோடி - மம்தா இடையிலான ரகசிய ஒப் பந்தத்திற்குச் சான்று” என்று சாடினார். திரிணாமுல் தலைவர்களின் ஊழலை பாஜக பாதுகாப்பதாகவும், அதற்குப் பிரதிபலனாகப் பாஜகவின் வகுப்புவாத அரசியலுக்கு மம்தா பானர்ஜி கதவைத் திறந்து விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வடவங்காளத்தின் துயரமும் மோடியின் மௌனமும் பிரதமரின் உரையைச் சுட்டிக்காட் டிய சலீம், “பிரிகேட் மைதானத்தில் நின்று கொண்டு வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் பிரதமர், வடவங்காளத்தின் எரி யும் பிரச்சனைகள் குறித்து ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். நலிவடைந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலம், மூடிக்கிடக்கும் ஆலைகள் மற்றும் எல்லைப்பகுதி மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்துப் பிரத மர் மௌனம் காப்பதாக அவர் விமர் சித்தார். “மக்களின் பசிக்குச் சோறு போடத் தெரியாதவர்கள், மதவெறி யைத் தீயாகப் பரப்பிப் பிழைப்பு நடத்து கிறார்கள்” என்று அவர் கண்டனம் தெரி வித்தார். இடதுசாரிகளின் மாற்று அரசியல் மதவெறிக்கும் ஊழலுக்கும் ஒரே மாற்று இடதுசாரிகள் மட்டுமே என்பதைத் தனது உரையில் முகமது சலீம் ஆணித் தரமாகப் பதிவு செய்தார். “வங்காள மண் மறுமலர்ச்சியின் மண்; இது வகுப்பு வாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணி யாது. மக்களின் ஒற்றுமையைச் சீர் குலைக்க நினைக்கும் சக்திகளை இடது சாரி முன்னணியின் கீழ் திரண்டுள்ள உழைக்கும் மக்கள் வரும் தேர்தலில் வேரோடு வீழ்த்துவார்கள்” என்று அவர் சூளுரைத்தார். (லெப்ட் வியூஸ்)
