இந்த ஆய்வகத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), எய்ம்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்ட 6 மணி நேரத்தில் முடிவுகள் வழங்கப்படும்.
கொரோனாவிற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை செய்யும் நடமாடும் (மொபைல்) ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது மிக குறைந்த செலவாக ரூ.499 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதியதாக 20 ஆய்வகங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் சான்றிதழ் அளித்துள்ளது. திறக்கப்பட்ட முதல் திட்டமாக, ஒவ்வொரு ஆய்வகத்திலும் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ய முடியும் என ஸ்பைஸ்ஹெல்த் தெரிவித்துள்ளது. அங்கு, முதல் கட்டமாக சோதனைக்கு மேலாக சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஒரு காற்றோட்ட சாதனம் மற்றும் விரல் நுனி துடிப்பு ஆக்சிமீட்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர். சோதனையில் ஒரு பகுதியாக, தொலை தூர பகுதிகளுக்கு இந்த நடமாடும் ஆய்வகங்கள் (மொபைல் ஆய்வகங்கள்) அனுப்பப்படுவதன் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் வருவதற்கு சற்று கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வகங்கள் நல்ல முடிவுகளை தரும் என ஸ்பைஸ்ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவனி சிங் கூறியுள்ளார்.