states

இந்திய மசூதிகளுக்கு ஏன் வருவதில்லை?

புதுதில்லி, ஜூன் 27- பிரதமர் மோடி எகிப்து மசூதிக்கு சென்றதை சுட்டிக்காட்டி, அவர் ஏன் இந்தியாவில் உள்ள மசூதிகளுக்கு வருவதில்லை என காங்கிரஸ் செய்தித்  தொடர்பாளர் சுப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவைத் தொடர்ந்து பிரதமர் மோடி எகிப்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு 1,000 ஆண்டு கள் பழமையான அல்-ஹக்கிம் மசூதிக்குச் சென்றார். அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். இதை யடுத்து, எகிப்து நாட்டு மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியாவில் ஏன் எந்த மசூதிக்கும் வருவதில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கேள்வி எழுப்பி யுள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர்  பக்கத்தில் அவர் கூறியிருப்ப தாவது,”அனைத்து மதங்களையும் சமமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கி யது போல, உலகப் புகழ்பெற்ற எகிப்து அல் ஹக்கீம் மசூதிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் மனமாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மதத்தையும் மதிக்க பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை? பிரதமர் மோடி அவர்களே! நீங்கள் ஏன் இந்தியாவில் எந்த மசூதிக்கும் வருவதில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுப்ரியா ஷ்ரினேட்டின் இந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.