பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பெண்க ளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்குநாள் மிக மோச மான அளவில் அதிகரித்து வருகிறது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள டெங்கு காய்ச்சல் காரணமாக அனு மதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண்ணை அந்த மருத்துவமனையில் கம்பவுண்ட ராக பணியாற்றும் நபர் இளம் பெண் உறங்கும் சமயத்தில் பாலியல் பலாத்கா ரம் செய்துள்ளார்.இளம்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். ஏற்கெனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த பாலியல் வன்கொடு மையால் மேலும் உடல்நலம் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. நோயாளியை பாலியல் பலாத் காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.