புதுதில்லி, டிச.10- சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அறைகூவலுக்கிணங்க டிசம்பர் 11 அன்று நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின் வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றி விழாக் கொண்டா ட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்வோம் என்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அதன் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி, இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாயூக் பிஸ்வாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட்டுகளினால் வழி நடத்தப்படும் எதேச்சதிகார மற்றும் மதவெறி சக்திகளின் கட்டளைக்கு அடிபணிந்து ஆட்சி செய்து வந்த மோடி அரசாங்கத்தின் மீது ஜன நாயகம் வெற்றி பெற்றிருப்பதையே விவசாயிகள் போராட்டத்தின் வர லாறு படைத்திடும் வெற்றிகாட்டு கிறது.
கார்ப்பரேட்டுகள் மற்றும் நவீன தாராளமய சக்திகள் மீது, விவசாயி களும், தொழிலாளர் வர்க்கமும் ஈட்டி யுள்ள இம்மாபெரும் வெற்றி நாட்டில் ஜனநாயகத்தையும், மதச்சார் பின்மையையும், நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தையும் மேலும் வலுப் படுத்திடும். மேலும் நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு எதிராக சமூகத்தின் பல்வேறு தரப்பினர் நடத்திவரும் போராட்டங்களையும் இந்த வெற்றியானது வலுப்படுத்தி டும். நாடு முழுவதும் மற்றும் தில்லி யின் எல்லைகளிலும் சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் டிசம்பர் 11 அன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட மான வெற்றி விழாக் கொண்டாட்ட த்தில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
இவ்வெற்றி விழாக் கொண்டாட்ட த்தை வண்ணமயமான பலூன்களுட னும், இசைக் கருவிகளுடனும், கொடிகளுடனும், சாலையோர விளம்பரக்காட்சிகளுடனும், ஒவ்வொரு கிராமத்திலும், நக ரத்திலும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவோம். விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாண வர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், வர்த்தகர்கள், தொழில் முனை வோர்கள், வழக்கறிஞர்கள், மருத்து வர்கள், இதழாளர்கள், அறிவுஜீவி கள், கலையுலகச் செயற்பாட்டா ளர்கள் என அனைத்துத் தரப்பினரை யும் இவ்வெற்றி விழாக் கொண்டாட்ட த்தில் பங்கேற்க வருமாறு அழைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)