புதுதில்லி, டிச.18- பாஜக கடைப்பிடிக்கும் இந்துத் துவா அரசியல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பதவியேற்று 3 ஆண்டு கள் நிறைவடைந்து விட்டது. இதை யொட்டி ஆங்கில ஊடகம் ஒன்று அவ ரிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியது. அதில், இந்து - இந்துத்துவா இடையி லான வேறுபாடுகள் குறித்து அண்மை யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது பற்றி கேள்வி எழுப்பியிருந் தது. அதற்கு பதிலளிக்கையிலேயே, இந் துத்துவா அரசியல், வெளிநாட்டு இறக்கு மதி என்று பாகேல் குறிப்பிட்டுள்ளார். “ராகுல் காந்தி, இந்துத்துவாவாதி களையும் இந்துக்களையும் பிரித்துப் பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடி யும்? பாஜக பின்பற்றும் கொள்கைகள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அங்கிருந்து தாக்கம் பெற்றவை. உதாரணமாக ஆர்எஸ்எஸ்-சின் காக்கி பேண்ட், தொப்பி, பேண்ட் ஆகியவற்றைப் பாருங்கள். இவை இந்தியச் சீருடைகளா? அல்லது அது இந்திய இசையா? காங்கிரசில் நாங்கள் இந்தியக் கலாச்சாரத்தையும் மரபையும் பின்பற்று கிறோம். ஆனால், பாஜகவின் அரசியல் கொள்கை வன்முறையும், வெறுப்பும் தான். யாரெல்லாம் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவார்கள். எவ்வளவோ படையெடுப்புகளைக் கண்ட இந்த இந்திய மரபு பல தாக்கு தல்களையும் மீறியும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்றுள்ளது. இந்த அமைப்பு அனைத்து தாக்குதல்களையும் உறிஞ்சிவிடும். காங்கிரஸ் அந்த மரபைத்தான் பின்பற்று கிறது. இவ்வாறு பூபேஷ் பாகேல் குறிப் பிட்டுள்ளார்.