states

img

பாஜகவில் சேர பணபேரம்; ஆம் ஆத்மி எம்.பி. புகார்!

‘‘பஞ்சாப்பில் பாஜக குதிரை பேரத்தில் ஈடு பட்டுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த மூத்த தலை வர் ஒருவர் என்னை அணுகி, பாஜக-வில் சேர்ந்தால் பெரியளவில் பணமும், ஒன்றிய அர சில் கேபினட் அமைச்சர் பதவியும் வழங்கு வதாக ஆசை காட்டினார். மேலும், இந்த மாநி லத்தில் ஆம் ஆத்மிக்கு உள்ளே ஒரே எம்.பி. நீங்கள்தான். எனவே, பாஜ.வுக்கு மாறினால் கட்சித் தாவல் தடை சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்தார்’’ என்று ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவரும், சங்ரூர் தொகுதி எம்.பி.யுமான பகவந்த் மான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.