states

24,680 கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் 4-ஜி சேவை

புதுதில்லி, ஜூலை 29- பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அமைச்சரவை நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4-ஜி மொபைல் சேவையை வழங்க  மொத்தம் ரூ.26,316 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4-ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். கூடுதலாக, தற்போது 2ஜி/3ஜி இணைப்பு மட்டுமே உள்ள 6,279 கிராமங்களுக்கும் 4-ஜி சேவை வழங்கப்படும் என ஒன்றிய அரசு வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன. இதன்படி, தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர்,  தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக் குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், இராம நாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவ கங்கை, தென்காசி உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங் களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பிஎஸ்என்எல் 4-ஜி மொபைல் சேவை அளிக்கப்படவுள்ளது.  இந்தத் திட்டம் பல்வேறு மின் ஆளுமை சேவைகள், வங்கிச் சேவைகள், டெலி மெடிசின், டெலி-கல்வி போன்றவற்றை மொபைல் பிராட்பேண்ட் மூலம் வழங்கு வதை ஊக்குவிக்கும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும்.