states

img

துணை முதல்வர் பதவியும் கிடையாது ஏக்நாத் ஷிண்டேவை ஓரம்கட்ட பாஜக திட்டம்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்த லில் மகாயுதி கூட்டணி 230 தொகு திகளில் வெற்றி பெற்று மீண்டும்  ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி 7 நாட்கள் ஆகி விட்ட சூழலிலும், இன்னும் மகாராஷ்டி ராவில் புதிய அரசு பொறுப்பேற்க வில்லை. இதற்கு காரணம் முதல்வர் பத வியில் யார் அமருவது என்பது தொ டர்பாக மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிக ளிடையே நீடிக்கும் மோதல் தான். தற்போது மகாராஷ்டிர முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக ஆசைப் படுகிறார். அதே போல துணை முதல்வர் களான பாஜகவின் தேவேந்திர பட்னா விஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் முதல்வர் பதவி பந்த யத்தில் உள்ளனர். யாரை மகாராஷ்டிரா முதல்வராக தேர்வு செய்வது என்பது தொடர்பாக தில்லி, மும்பை ஆகிய இடங்களில் இரண்டு கூட்டங்களும் நடந்து முடிந்துவிட்டன. டிசம்பர் 2ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையும் என மகாயுதி கூட்டணி செய்திகள் வெளி யாகியுள்ளன.  இந்நிலையில், தற்போது முதல்வ ராக உள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை ஓரம்கட்ட பாஜக திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. முதல்வர் விஷயத்தில் பாஜக வின் முடிவை ஏற்பேன் என ஷிண்டே பணிந்து விட்டதால், மகாராஷ்டிரா முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. எனி னும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு துணை  முதல்வர் பதவி அளிக்க முடியாது என பாஜக கைவிரித்ததாக செய்திகள் வெளி யாகியுள்ளன. அதாவது ஏக்நாத் ஷிண்டே மகன் அல்லது அவரது கட்சியில் யாரா வது ஒருவருக்கு துணை முதல்வர் பதவி யும், ஏக்நாத் ஷிண்டேவை ஒன்றிய அமைச்சர் பதவியில் அமர்த்த பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியா கியுள்ளன. ஆனால் பாஜகவின் உத்தர வுக்கு ஏக்நாத் ஷிண்டே சம்மதிக்க வில்லை என தகவல் வெளியாகி யுள்ளன.