இடாநகர், ஜூலை 10 - பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் என்று, பாஜக- வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சியின் (National People’s Party- NPP)தலைவர் கான்ராட் சங்மா ஏற்கெனவே தனது எதிர்ப்பைப் பதிவு செய்தி ருந்தார். மேகாலயா முதல்வரான கான்ராட் சங்மா, “ஒரு அரசி யல் கட்சியாக, பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) என்பதை தேசிய மக்கள் கட்சி யால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கி றோம்” என்று கடந்த வாரம் பேட்டியில் கூறியிருந்தார். “பொது சிவில் சட்டத்தின் முழுக் கருத்தும் மேகாலயா மாநிலத்தின் கலாச்சார நடை முறைகளை மாற்றியமைக்கு மானால், அதனை மேகாலயா மாநிலமும், தேசிய மக்கள் கட்சியும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேசிய மக்கள் கட்சியின் அருணாசல பிரதேச மாநிலப் பிரிவும், பொது சிவில் சட்டத்திற்கு எதி ராக, செயற்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. கூட்ட முடிவுகளை விளக்கி, தேசிய மக்கள் கட்சி யின் மாநிலப் பொதுச்செய லாளர் பக்ங்கா பேஜ் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “அரு ணாசல பிரதேச மாநிலத்தில் பலதரப்பட்ட இன மற்றும் பழங்குடியின அமைப்பை யும், அதன் வலுவான பாரம் பரிய அடையாளத்தையும் மேற்கோள் காட்டி, பொது சிவில் சட்டத்தை எதிர்க்க, கட்சி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரு ணாசல பிரதேசத்திற்கு என தனித்துவமான சட்டங்கள் உள்ளன. தேவைப்படுமா னால், சில மாற்றங்களுடன் இந்த சட்டங்களையே தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்று குறிப்பிட் டுள்ளார். “வளர்ச்சி விஷயங் களில், தேசிய மக்கள் கட்சி யானது, பாஜகவுடன் கூட் டணியில் இருந்தாலும், அதன் சொந்த சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. தேசிய மக் கள் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி. எந்தவொரு தனிநபர் அல்லது மதக் குழுவிற்கும் எதிராக, எந்தவித பார பட்சத்தை அது கொண்டி ருக்கவில்லை. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக னின் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் நலனை உறுதி செய் வதே கட்சியின் ஒரே நோக் கம்” என்று மாநில செயல் தலைவர் லிகா சாய் குறிப பிட்டுள்ளார். தேசிய மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி என்பது குறிப் பிடத்தக்கது.