states

img

2021-22 நிதியாண்டில் 9.7 சதவிகிதம்தான் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறைத்தது ஏடிபி வங்கி!

புதுதில்லி, டிச. 16 - இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி தொடர்பான தனது முந்தைய மதிப்பீட்டை ஆசிய வளர்ச்சி வங்கி (The Asian Development Bank - ADB) தற்போது குறைத்துக் கொண் டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.7 சதவிகிதமாகவே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்திருந்தது. தற் போது அதை 9.7 சதவிகிதமாக குறைத்துள்ளது. தொழில் துறை சம்பந்த மான விநியோகத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் காரணமா கவே, தனது கணிப்பை ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை மட்டுமன்றி, தெற் காசியாவின் பொருளாதார வளர்ச்சியையும் ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்து அறி வித்துள்ளது. இதற்கு முன்பு 8.8 சதவிகித மாக இருக்கும் எனக் கணித்தி ருந்த நிலையில், தற்போது அதனை, 8.6 சதவிகிதமாக திருத்தி அமைத்துள்ளது.  இதில், இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரை, ஆசிய வளர்ச்சி வங்கி இதுவரை மூன்று முறை தன்னு டைய கணிப்பை மாற்றி அறி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;