states

img

ஜின்னா செய்ததைத்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் செய்கின்றன!

திஸ்பூர், மார்ச் 24- “ஜின்னா செய்ததைத் தான் (நாட்டுப் பிரிவினை) பாஜக வும், ஆர்எஸ்எஸ்-ஸூம் செய் கின்றன” என அசாம் எம்எல்ஏ  ரபிகுல் இஸ்லாம் கூறியுள்ளார். அகில இந்திய ஐக்கிய ஜன நாயக முன்னணியின் (ஏஐயு டிஎப்) எம்எல்ஏ ரபிகுல் இஸ் லாம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ஜின்னா நாட்டை இந்தியா மற் றும் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக பிரித்தார். பாஜக வும், ஆர்எஸ்எஸ்-ஸூம் அதை யே செய்கின்றன. மேலும் அவர் கள் இந்து மற்றும் முஸ்லிம் கள், தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்கள் என பிரிக்கி றார்கள். சாதி, சமூகம், மத அடிப்ப டையில் மக்களை பிரிப்பதை எங்கள் கட்சி ஆதரிக்காது. பாஜக அரசோ வெறுப்புணர்வை  பரப்பி வருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை பிர தமர் ஆதரிக்கிறார். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு  அளிக்கும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி தொட ங்க வேண்டும். காஷ்மீரில் நடந்த கொலைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பிரதமர் மற்றும் பாஜக அரசு பொறுப்பேற்க வேண் டும். காஷ்மீர் பண்டிட்டுக ளுக்கு நீதி உறுதி செய்யப்பட வேண்டும். மாறாக, வெறுப்பை பரப்புவதே பாஜகவின் குறிக் கோளாக உள்ளது. இவ்வாறு ரபிகுல் இஸ் லாம் குற்றம் சாட்டியுள்ளார்.