states

img

ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுதில்லி, ஜூலை 8 - 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்து விட்ட குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணு கோபால் தெரிவித்துள்ளார். கேரளாவின் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி நிகழ்ச்சி யில் பேசிய அவர், “எங்களுக்கு முன் இன்னும் ஒரு வழி இருக்கிறது. அது தான் உச்ச நீதிமன்றம். அங்கு மேல் முறையீடு செய்வோம். காங்கிரஸ் கட்சியும் அந்த விருப்பத்தை நாடும்” என்று தெரிவித்துள்ளார். “குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஆய்வு செய்வோம். ராகுல் காந்திக்கு ஆதரவான அனைத்து சட்ட வாய்ப்புக்களையும் ஆராய்வோம். ராகுல்ஜி, மோடி அரசாங்கத்தை நேருக்கு நேர் கொண்டு செல்லும் கடுமையான குரலாக செயல்படுகி றார். எந்த சக்தியாலும் அவரை மவுன மாக்க முடியாது. உண்மை வெல்லும், இறுதியில் நீதி வெல்லும். இந்த போராட்டத்தில் தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் ராகுலுக்கு ஆதரவாக உள்ளனர்.” என்று டுவிட்டர் பக்கத்திலும் கே.சி. வேணு கோபால் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

;