states

img

கோவா பெண் எம்எல்ஏ பாஜக-விலிருந்து விலகினார்!

பனாஜி, டிச. 17 - கோவா மாநிலத்தைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ, ஒருவர் ஆளும் பாஜக- விலிருந்து விலகி யுள்ளார். தனது எம்எல்ஏ  பதவியையும் அவர் ராஜி னாமா செய்துள்ளார். பாஜக-வைச் சேர்ந்த  மறைந்த கோவா முதல்வா் மனோகா் பாரிக்கா் தலைமையிலான அமைச் சரவையில் இடம்பெற்றி ருந்தவர் ஜோஸ் சல்தானா.  இவர் 2012-ஆம் ஆண்டு காலமானதை அடுத்து, கோர்டாலிம் தொகுதியில் ஜோஸ் சல்தானாவின் மனைவி ஆலினா சல்தானாவை பாஜக வேட்பாளராக நிறுத்தியது. அவரும் வெற்றி பெற்றார். 2017 தோ்தல் இரண்டாவது முறையாகவும் அதே தொகுதியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்தான், கோவா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறி விக்கப்படவுள்ள நிலை யில், பாஜக-விலிருந்து ஆலினா சல்தானா (69)  விலகியுள்ளார். எம்எல்ஏ  பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.  “கோவாவில் முன்பி ருந்த பாஜக இப்போது இல்லை. கொள்கைகளை மறந்து குழப்பம் நிறைந்த கட்சியாக கோவா பாஜக  மாறிவிட்டது. கட்சியிலிருந்து யார்  எப்போது வெளியேறு வார்கள்.. யார் புதிதாக வருவார்கள்.. என்றே தெரியவில்லை. எனவே கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்று கூறி யுள்ள ஆலினா சல்தானா தற்போது ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

;