புதுதில்லி, ஜூலை 21 - மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஜூன் 12-ஆம் தேதியே புகார் அனுப்பப்பட்டும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளி யிட்டிருந்தன. இதற்கு தேசிய மகளிர் ஆணை யத்தின் (NCW) தலைவர் ரேகா சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தங்கள் பக்கம் எந்தப் பிரச்சனையும் இல்லை; மணிப்பூர் அரசுதான் கார ணம் என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகள், பாலியல் வல்லு றவு மற்றும் பெண்களின் வீடுகளை எரித்தல் தொடர்பாக, மணிப்பூரில் உள்ள அதிகாரிகளுக்கு கடந்த 3 மாதங்களில் மூன்று முறை நோட்டீஸ் அளித்தும் அவர்களிடமிருந்து எந்த பதி லும் வரவில்லை என்று ரேகா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். “மாநிலத் தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி மற்றும் டிஜிபி ராஜீவ் சிங் ஆகியோருக்கு மே 23 அன்றும் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பிறகும் மே 29, ஜூன் 19 ஆகிய தேதிகளில், தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷிக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. “விஷயத்தின் அவசரத்தையும் முக்கியத்துவத்தை யும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடி யாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.