பஞ்சாப் விவசாயிகளுக்கு இழப்பீடு ஏக்கருக்கு ரூ.20,000 வழங்கும் ஆம் ஆத்மி அரசு
37 ஆண்டுகாலம் இல்லாத அள வில் பெய்த கனமழையால் பஞ்சாப் மாநிலம் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 40க்கும் மேற்பட்டோர் பலி யாகியுள்ளனர். பலர் காணாமல் போயுள் ளனர். பல ஆயிரம் வீடுகள் சேதமடைந் துள்ளன. பள்ளிகள் ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக 3 லட்சம் ஏக்க ருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் குளங்களாக மாறி சேதமடைந்துள்ளன. வயல்வெளிகள் மட்டுமின்றி, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் தற்காலிக நதிகளாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், மழையால் சேதமான விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கி பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. கணக்கீடு முடிந்த பின்பு உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என இதுதொடர்பான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பஞ்சாப் செல்கிறார் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை அன்று பஞ்சாப் செல்கிறார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் பகுதியை மோடி பார்வையிடுகிறார் என அம்மா நில பாஜக தலைவர் கூறியுள் ளார்.