states

img

விளம்பரத்திற்காக ரூ.489 கோடியை செலவிட்ட கெஜ்ரிவால் அரசு!

புதுதில்லி, ஜூலை 8 - தில்லியில் அரவிந்த் கெஜ்ரி வால் ஆட்சியில், விளம்பரங்க ளுக்கு அரசு செலவிடும் தொகை, கடந்த 2012 முதல் 2020 வரை யிலான காலத்தில் 4,273 சதவிகி தம், அதாவது 42 மடங்கு அதி கரித்திருப்பது தெரியவந்துள்ளது. தில்லி அரசு விளம்பரங்க ளுக்கு அதிக செலவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த  தகவல் அறியும் உரிமை செயற் பாட்டாளர் கன்னையா குமார், தில்லி அரசு விளம்பரங்களுக்காக செலவிடும் தொகை குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளார்.

இதன்படி, 2021-22 நிதி யாண்டில் மட்டும் தில்லி அரசு விளம்பரங்களுக்காக ரூ. 488 கோ டியே 97 லட்சம் செலவிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும் ரூ. 125 கோ டியே 15 லட்சம் செலவிட்டுள்ளது.  2012-13 நிதியாண்டில் தில்லி யில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஷீலா தீட்சித் முதல்வ ராக இருந்தார். அப்போது தில்லி அரசு விளம்பரங்களுக்காக செல விட்ட தொகை ரூ. 11 கோடியே 18 லட்சம் மட்டுமே ஆகும்.  இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால் 2015-ஆம் ஆண்டு தில்லி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போதுமுதலே விளம்பரங்க ளுக்கு தில்லி அரசு செலவிடும் தொகை அதிகரிக்கத் தொடங்கி யது.

2015-16 நிதியாண்டில் ரூ. 81 கோடியே 23 லட்சம், 2016-17 நிதியாண்டில் ரூ. 67 கோடியே 25 லட்சம், 2017-18 நிதியாண்டில் ரூ.117 கோடியே 76 லட்சம், 2018-19 நிதியாண்டில் ரூ.45 கோடியே 54 லட்சம், 2019-20 நிதியாண்டில் ரூ. 200 கோடி என விளம்பரங்களுக் காக தில்லி அரசு செலவிட்டுள் ளது. கொரோனா கால கட்டத்தில் விளம்பரங்களுக்கான தில்லி அரசின் செலவு மேலும் அதிக ரித்துள்ளது. 2020-2021 நிதியாண் டில் ரூ. 293 கோடி, 2021-2022 நிதி யாண்டில் ரூ. 488 கோடியே 97 லட்சம் என தில்லி அரசு விளம்ப ரங்களுக்காக செலவிட்டுள்ளது.