ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட் டத்தில் உள்ள தேவர்கட் மலைப் பகுதியில் மல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண் டும் விஜயதசமி அன்று திருக்கல்யா ணம் நடைபெறும். தொடர்ந்து கோவிலின் சுற்று வட்டாரத்தில் உள்ள 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்க ளது வழிபாடுகள் முடித்த பின் தடிக ளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிடுவது வழக்கம். செவ்வா யன்று இரவு இந்த நிகழ்ச்சி நடை பெற்ற நிலையில், ஒருவரை ஒருவர் தடி யால் தாக்கிக் கொண்டனர். இதில் நூற் றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவில் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த தடியடி திருவிழாவை சிலர் மரத்தின் மீது அமர்ந்து பார்த்துக் கொண்டி ருந்தனர். எதிர்பாராவிதமாக மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பழங்காலத்திலிருந்து இந்த தடியடி விழா நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாவை நிறுத்த பல ஆண்டுகளாக போலீசார் முயற்சித்து வந்த போதும் அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.