states

img

கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தாமலேயே வீணான 10 கோடி டோஸ்

புதுதில்லி, அக். 6 -  2019-ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தியது. மக்கள் லட்சக்கணக்கில் செத்து மடிந்தனர்.  இதன் பின்னணியில் நீண்ட போராட்டத்திற்குப் பின் தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.  இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும் உதவியாக இருந்தன. இங்கு இதுவரை 218 கோடி டோஸ்களுக்கும் அதிகமாக தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.  எனினும், இப்போதும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கு 2-வது தவணையும், இரு தவணை தடுப்பூசியும் செலு த்தியவர்களுக்கு முன் எச்சரிக்கை (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசியும் செலுத்து வதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  

இந்தநிலையில் இந்தியா வில் தயாரான தடுப்பூசி களில் கடந்த மாதம் இறுதி வரை சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 என்று வைத்துக்கொண்டால் வீணான தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ. 2 ஆயிரத்து 250 கோடி ஆகும்.  பொதுவாக கொரோனா அல்லாத தடுப்பூசிகள் 3 ஆண்டு கால ஆயுளை கொண்டிருக்கும். ஆனால் கொரோனா தடுப்பூசிகள் 9 முதல் 12 மாதம் வரை மட்டுமே காலஅவகாசம் கொண்டதாக உருவாக்கப் பட்டிருந்தன. தடுப்பூசிகள் வீணானதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிய அரசு ‘அம்ரித் மகோ த்சவ்’ என்ற பெயரில் ‘பூஸ் டர் டோஸ்’ தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அறி வித்தது. அதுவரை பூஸ்டர்  டோஸ் தடுப்பூசி செலுத்தி யவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்த சதவிகிதம் 27-ஐ தாண்டி உள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலங்களில் சுமார் 21.9 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை தெரி வித்துள்ளது. எனினும், நாளொன்றுக்கு 2 முதல்  3 லட்சம் டோஸ் வரை யிலான தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்படு வதாக கூறப்படுகிறது.