சென்னை, செப். 6 - உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாண வர்களின் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பான பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தவித்து வரு கின்றனர். தற்போது இந்தியா வில் உள்ள 604 மருத்துவ கல்லூரிகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் உள் ளன. அதனை உக்ரைனில் இருந்து வந்த மாணவர் களுக்கு நிரப்ப ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.