states

காலமுறை ஊதியம் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம்கோரிக்கை

சென்னை, ஏப். 18  - தமிழகத்தில் 32 அரசினர் தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் சுமார் 2 ஆயிரம் பேர் பயில்கின்றனர். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க  கூடுதலாக 130 பயிற்றுநர்களும், உதவியாளர்களாக 27 பேரும் தொகுப்பூதி யம் உள்ளிட்ட முறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதன்படி, 157 பேரும்  12 ஆண்டுகளாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு  உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை நாடு முழுவதும் அனைத்து  தொழிற்பயிற்சி நிலையங்களிலும் அமல்படுத்த ஒன்றிய அரசு உத்தர விட்டது. இதன்படி, ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்தாண்டு சட்டமன்ற தேர்தலின்போது, மின்வாரியம், அரசு  கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல்  பணிபுரிந்து வரும் ஒப்பந்த, தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக அறிவித்தது. இதன்படி, நீர்வளத்துறையில் தினக்கூலிகள் 1458 பேர், அறநிலையத் துறையில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள், சுகாதாரத்துறையில் பணி யாற்றிய தொகுப்பூதிய ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை யடுத்து, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றிய ஒப்பந்த  ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்படும் ஐடிஐ-களில், தொகுப்பூதியத்தில் 3 லிருந்து 12 ஆண்டுகளாக பணி யாற்றும் 157 பேரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்.  தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.