states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பி.எப் வட்டி விகிதத்தை உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு ஒன்றிய நிதித்துறை அமைச் சகம் ஒப்புதல் அளித்துள் ளது. பி.எப் வட்டி விகிதம்  கடந்த சில ஆண்டுகளாகவே  குறைக்கப்பட்டு வந்தது. கடந்த 2018-19இல் 8.70% ஆக  இருந்து பின்னர் 8.50% ஆக இருந்தது. கொரோனா தொற் றுக் காலத்தில் (2021-22) 8.10% ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 0.05%  உயர்த்தப்பட்டுள்ளது.

சஞ்சய் சிங் சஸ்பெண்ட் ஜனநாயகக் கொலை

“ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய் யப்பட்டது ஜனநாயக படு கொலை. மணிப்பூர் மீது  விவாதம் நடத்த அனுமதிக்கு மாறு மாநிலங்களவை தலை வர் ஜகதீப் தன்கரிடம் எதிர்க் கட்சித் தலைவர்கள் வலி யுறுத்தியும் கவனம் செலுத்த வில்லை. இதனால் சஞ்சய்  சிங் கவனத்தை ஈர்க்க தன்கரை அணுகினார். ஆனால் சஞ்சய் சிங் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்” என ஆம்  ஆத்மி மூத்த தலைவர் ராகவ்  சதா கூறியுள்ளார்.

சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் நீட்டிப்பு

பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் அமைச்சர்  சத்யேந்தர் ஜெயின் இடைக் கால ஜாமீனை 5 வாரங் களுக்கு நீட்டித்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.சத்யேந்தர் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து  கொண்டதாகவும், குணம டைய அவகாசம் தேவை  என்றும் ஜெயின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித் ததை அடுத்து  உச்ச நீதி மன்றம் ஜாமீனை நீட்டித்துள் ளது.

மணிப்பூர் சம்பவம் வெட்கக் கேடானது

“மணிப்பூர் சர்வதேச அளவில் விவாதிக்கப்படு கிறது. ஆனால் நம் நாட்டில் இல்லை. நான் என்ன சொல்ல முடியும்? இது மிகவும் வெட்கக்கேடான விஷயம்” என ஒன்றிய பாஜக அரசை நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன்  விமர்சித்தார்.

டுவிட்டர் பெயர், லோகோ மாற்றம்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறு வனத்தை வாங்கியது முதலே  நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும்  நிலையில், தற்பொழுது டுவிட் டர் நிறுவனப் பெயரையும் நிறுவனத்தின் நீலக் குருவி லோகோவை நீக்கி எக்ஸ் (X) என ஆங்கில எழுத்தில் மாற்றியிருக்கிறார்.

பாகிஸ்தானில் கனமழைக்கு 133 பேர் பலி

பாகிஸ்தான் வடக்குப் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கனமழை மற்றும்  நிலச்சரிவில் சிக்கி 133 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும்,  கிழக்கு பஞ்சாப் மாகாணத் தில் உள்ள ஜீலம், சட்லெஜ்  மற்றும் செனாப் ஆகிய 3  முக்கிய நதிகள் கனமழை யால் நிரம்பியுள்ளன. கடந்த  மூன்று வாரங்களில் மொத்தம்  15,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடிக்கு குக்கி மகளிர் அமைப்பு கடிதம்

இம்பால், ஜூலை 24 - மணிப்பூரில் கடந்த 11 வாரங்களாக தொடர்ந்துவரும் வன்முறையில், பாதிக்கப் பட்ட அனைத்து குக்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் நீதி வழங்குவதற்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்  என்று மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர் அமைப்பு (KWOHR) கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும், இந்த கடிதத்தின் நகலை, இந்திய தலைமை நீதிபதி, ஒன்றிய உள்துறை அமைச்சர், தேசிய மகளிர் ஆணைய தலைவர், பழங்குடியினர் தேசிய ஆணையத் தலைவர் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஆகியோருக்கும் குக்கி மகளிர் அமைப்பினர் அனுப்பியுள்ளனர். மனித உரிமைகளுக்கான குக்கி மகளிர்  அமைப்பானது (KWOHR), மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராக குக்கி இன்பி, குக்கி மாணவர்கள் அமைப்பு மற்றும் குக்கி காங்லாய் லாம்பி மற்றும் நாகாக பெண்களை இணைத்து போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

ஓ.பன்னீர் செல்வத்துடன் கைகோர்க்கும் அமமுக

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகஸ்ட் 1 அன்று போராட்டம் நடத்த உள்ளார். இந்த போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளிடம்  கெஞ்சும் அமித் ஷா

“மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளு மன்ற விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம். இந்த முக்கியமான விஷயத்தில் நாடு உண்மை யை அறிந்து கொள்வது முக்கியம் என்பதால் நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கெஞ்சும் தோனியில் பேசியுள்ளார்.

அமைச்சர்களுக்குப் பின்னால்  மோடி ஒளிந்து கொள்கிறார்

“அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார். கேள்விகளை பிரதமர் எதிர்கொள்ள முடியாததால் தான் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது” என மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார்.

புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும்

“நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூறி சுற்றறிக்கை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பரிசீலனை  செய்து 2 நாட்களில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தங்களிடம் தெரிவித்திருப்ப தாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளது.

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர்

சென்னை,ஜூலை 24- சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார். இதற்கு அவர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னை வருகிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வருகிறார்.

உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையை திரும்பப் பெறுக: வைகோ

சென்னை, ஜூலை 24- நீதிமன்றங்களில் தலைவர் கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு; உயர்நீதிமன்ற பதிவாளர்  ஆணையை திரும்பப்பெற வேண் டும் என்று மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றங்களில் திருவள்ளூவர், காந்தி படங்கள் மட்டுமே வைக்கப் பட வேண்டும் என்று அறிவுறுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல உயர்நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளனர். உயர்நீதி மன்ற உத்தரவால் ஆலந்தூர் நீதி மன்ற வாசலில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவச்சிலை அகற்றப் பட்டுள்ளது. திருவள்ளூவர், காந்தி படங்கள் வரிசையில் அம்பேத்கர் படம் இடம்பெற அனுமதிக்குமாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,ஜூலை 24- சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிது நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.  இதையடுத்து கோயம்பேடு காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய்  உதவியுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீவிர சோதனை செய்த னர். இதனால் வெளி மாவட்டங்க ளுக்கு செல்லும் மற்றும் வெளியூ ரில் இருந்து வந்த பயணிகள் கடும்  அச்சமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை:  பிரேமலதா

சென்னை, ஜூலை 24- தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவ லகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை யில் திங்களன்று (ஜூலை 24) நடைபெற்றது. அதன்பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,“தேதிமுக தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம்”என்றார்.

உலகச் செய்திகள்

ஜப்பான் கடலில் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக ராணுவப் பயிற்சி யில் ஈடுபட்டுள்ளன. ஜூலை 20 ஆம் தேதியன்று தொடங்கிய இந்தப் பயிற்சி 23ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இரு நாடு களின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்து வது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவுவது ஆகியவற்றிற்காக இந்தப் பயிற்சி என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ள பிரிக்ஸ் அமைப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராகச் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. 22 நாடுகள் விண்ணப்பம் அளித்திருக்கின்றன. அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் இதை விவாதிக்கப் போவதாக தென் ஆப்பிரிக்கா அறிவித்திருக்கிறது. 

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை  கிடைப்பது அரிதாகிவிட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களில் வெறும் 50 விழுக்காட்டினருக்கு மட்டும்தான் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 

;