states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. 2023-ஆம் ஆண்டு  நவம்பரில் டிஎன்பிஎஸ்சி  குரூப்-1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என வும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அட்ட வணை அடுத்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.
  2. நாட்டில் 1,472 ஐஏஎஸ் பதவி காலியிடங்களும், ஐபிஎஸ் பிரிவில் 864 காலியிடங்களும், ஐஎப் எஸ் பதவிகளில் 1,057 காலியிடங்களும் உள்ள தாக ஒன்றிய அரசு நாடா ளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.  
  3. தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தான் சந்தி த்ததாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்ததாகவும், பண மோசடி வழக்கில் சிறை யில் உள்ள சுகேஷ் சந்திர சேகர், பாட்டியாலா நீதி மன்றத்தில் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
  4. தேனி மாவட்டம் சுருளிப் பட்டியில் காட்டு யானை கள் கூட்டம் வாழைத் தோப்பை சூறையாடி யதில் சுமார் 200 வாழை மரங்கள் சேதமாகின.
  5. விருதுநகர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந் தரவு கொடுத்த இராஜ பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.7000 அபராதம் விதித்து  மாவட்ட போக்சோ நீதி மன்றம் உத்தரவிட்டது.
  6. பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் எம்எல்ஏ ரோஹித் ரெட்டி ஹைதரா பாத்தில் உள்ள அமலாக் கத்துறை இயக்குனரகத் தில் 2-வது நாளாக விசா ரணைக்கு ஆஜரானார்.
  7. நேபாள தேசிய வங்கியில் (ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டு அறிக்கையின் படி) பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகள்  ரூ. 7.84 கோடி அளவுக்கு உள்ளதாக நாடாளுமன் றத்தில்  நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  8. இமாச்சலப் பிரதேசத் தின் 14-வது சட்டப்பேர வையின் முதல் கூட்டத் தொடர் டிசம்பர் 22-ஆம்  தேதி நடைபெறவிருக் கும் நிலையில், அம் மாநில முதல்வர் சுக்விந் தர் சிங் சுகுவுக்கு  கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  9. புதுக்கோட்டை மாவட் டம் திருநாளூரில் கடந்த 2020-ஆம் ஆண்டு இடத் தகராறில் பாலன் (60) என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கணவன் - மனைவியான முரளி (42), தேவி (33) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழ ங்கி மாவட்ட மகளிர்  நீதி மன்றம் தீர்ப்புவழங்கியது.
  10. அரசு நிதியை அரசியல் விளம்பரங்களுக்கு தவ றாக பயன்படுத்திய குற்றச் சாட்டில் ஆம் ஆத்மி கட்சி யிடமிருந்து ரூ.97 கோடி வசூலிக்க தில்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
  11. ஜனவரி 4 காலை 11 மணி அளவில் சென்னை தலை மை செயலக அலுவலகத் தில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் தமிழ் நாடு அமைச்சரவை கூட் டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  12. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும்  சிரில் ராமபோசா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் அவர், மீண்டும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017  ஆம் ஆண்டில் கட்சியின் தலைவரான அவர், 2018 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளது என்று அதை விசாரிக்கும் குழு அறிக்கை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  13. ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக அன்டோனி ஆல்பனீஸ் பொறுப்பேற்ற பிறகு, சீனாவுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சிகள் தொடங்கின. அடுத்த ஆண்டில் அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் சீனா செல்கிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவுள்ள நாடான சீனாவுடனான உறவுகளை நிலைநிறுத்தும் பணியில் இந்தப் பயணங்கள் இருக்கும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  14. சர்வதேச நிதியத்திடமிருந்து(ஐ.எம்.எப்) 300 கோடி அமெரிக்க டாலர் கடனை எகிப்து பெறுவதற்கான திட்டம்  ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. தற்போது அந்நியச் செலாவணியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை உடனடியாகச் செலுத்துவதற்கும், பட்ஜெட்டில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வாகவும் இந்தக் கடன்  உதவும் என்று ஐ.எம்.எப் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருக் கிறது.
  15.