states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விழுப்புரத்தில் மீண்டும் போராட்டம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.ஏ.டி கலிவரதன் விழுப்புரம் தெற்கு மாவட்ட  பாஜக தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் ஆபா சமாக பேசியதாக மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் 2 மாதங்களில் பதவி வழங்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவருக்கு எதி ராக மாநில தலைவர் அண்ணாமலை நட வடிக்கை எடுக்கவில்லை என கூறி கட்சி நிர்வாகிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். “விழுப்புரம் மாவட்ட பாஜகவில் தங்க ளுக்கு பாதுகாப்பு இல்லை” என்ற குற்றச்  சாட்டு கோஷங்களுடன் பாஜக பெண் நிர்வாகி கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

28% ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்யுங்கள்

முழு வைப்புத் தொகையில் ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி வரிவிதிக்கும் சமீ பத்திய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு  127 ஆன்லைன் கேமிங் பிளேயர்கள் கொண்ட குழு ஒன்றிய அரசிடம் கோரிக்கை மனு அளித்  துள்ளனர். மனுவில் ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி வரி மனு தொழில்துறையின் வளர்ச்சிப் பாதையை மாற்றியமைக்கும், ஸ்டார்ட்அப்களுக்கு பேரழிவுகரமான தாக்  கங்களை ஏற்படுத்தக்கூடும் என கூறப்பட் டுள்ளது.

பொது சிவில் சட்டம்: ஜூலை 28 வரை  கருத்துக் கேட்பு நீட்டிப்பு

பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவ காசத்தை ஜூலை 28-ஆம் தேதி வரை சட்ட  ஆணையம் நீட்டித்துள்ளது.

எருமை பால் தராவிட்டால், முஸ்லிம்கள்தான் காரணமா?

மேற்குவங்கத்திலிருந்து புலம்பெயர்ந்து அசாமில் குடியேறிய மியாக்கள் (முஸ்லிம்கள்)- தான், விலைவாசி உயர்வுக்கு காரணம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசியிருந்தார். இதற்கு, மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி டுவிட்டரில்  பதிலடி கொடுத்துள்ளார். ‘’அசாமில் சில குரூப்புகள் உள்ளன. அவர்களின் வீட்டு எருமை பால்  கொடுக்கவில்லை என்றாலும், கோழி முட்டையிடவில்லை என்றாலும், மியா (முஸ்லிம்கள்) மீதுதான் குற்றம்சாட்டுவார்கள். ஒருவேளை அவர்களுடைய தனிப்பட்ட தோல்விகளால் இதுபோன்று குற்றம் சாட்டலாம்’’ என்று அவர் சாடியுள்ளார்.

ரிசர்வ் வங்கி - ஐக்கிய அரபு வங்கி ஒப்பந்தம் 

எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பை நிறுவுதல் தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கி, இணைந்து 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன.

பாஜகவிற்கு வெட்கமில்லையா?: நடிகர் பிரகாஷ் ராஜ்

“கூட்டுறவுத் துறையில் அஜித் பவார் பெரிய நிதி மோசடி செய்ததாக பாஜக முன்பு குற்றம் சாட்டியது. ஆனால் இப்போது எப்படி அவர் நிதித்துறையை கையாளுவார். பாஜகவிற்கு வெட்கமாக இல்லையா? வாஷிங் மெஷின் பார்ட்டி” என தேசியவாத காங்கிரஸ் உடைத்து பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மாநில அரசுகளை ஏடிஎம்களாக மாற்றுகிறார் மோடி

“அதானி குழும நிறுவனத்திற்கு தாராவி மறுவடிவமைப்புத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மாநில அரசுகளை தனது கூட்டாளிகளுக்காக ஏடிஎம் இயந்திரங்களாக  மாற்றியதற்கு தாராவி - அதானி திட்டம் மற்றொரு எடுத்துக்காட்டு” என காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னா விஸ் ரூ.23,000 கோடியில் தாராவி மறுவடிவமைப்புத் திட்டம் அதானி குழுமத்திடம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு

செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பை, இவ்வழக்கில்  3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி. கார்த்திகேயனும் வெள்ளியன்று உறுதி செய்தார்.  இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில், தங்களின் கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதிய குடும்ப அட்டையை பெற கட்டுப்பாடு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில், குடும்ப  அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம்  என ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் புதிய குடும்ப அட்டை  பெறுவதற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காய்கறி விலை உயர்வால் மீன்கள் விற்பனை அதிகரிப்பு

காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில் மீன்கள் விலை குறைவாக உள்ளதால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மீன்கள்  வாங்க குவிந்தனர். வழக்கத்தை விட மீன்களின் விலை குறைவாக உள்ளது. விலை மீன்  ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊழி மீன் ரூ.300-க்கும், பாறை மீன் ரூ.250-க்கும், சாலை மீன் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு

அதிமுக ஆட்சியில் 230 கிலோ வாட் கேபிள் பதிக்கப்பட்டதில் பழுது ஏற்பட்டதை சரி செய்ய விடப்பட்டதற்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் ரவிச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. விதிகளின்படி புதைவட மின்கேபிள்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பழுதுபார்க்க உத்தரவாத காலம் உள்ளது. ஆனால் உத்தரவாத காலம் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகாமல் டெண்டர் விடப்பட்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை:  ஜூலை 20 முதல்  டோக்கன்

 சென்னை, ஜூலை 15- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப விநியோகம் வருகிற 20 ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. அரசு வெளியிட்டிற்கும் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலை பேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை பெறுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் வெப்பநிலை 2-4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து 8 பேர் அகதிகளாக வருகை

இலங்கையில் இருந்து இரண்டு குடும்பத்தினர் படகு மூலம் வெள்ளியன்று இரவு இராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதிக்கு வந்து இறங்கினர். இவர்களை இறக்கிவிட்ட நாட்டு படகு திரும்பச் சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த இராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் 8 பேரையும், இராமேஸ்வரம் கடற்கரை காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்தனர். முழுமையான விசாரணைக்குப்பின் இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

உலகச் செய்திகள்

குடிநீர் வழங்குவதில் மேற்கு ஆசிய நாடுகளிலேயே ஈரான் தான் முன்னணியில் இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. நகர்ப்பகுதிகளில் 99.83 விழுக்காடும், கிராமப் பகுதிகளில் 82 விழுக்காடும் குடிநீர் வசதிகள் இருக்கிறது. பிற மேற்கு ஆசிய நாடுகளில் நகரில் 85.7 விழுக்காடும், கிராமத்தில் 59.6 விழுக்காடும் குடிநீர் வசதி இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவு விவகாரங்களுக்கான மத்திய ஆணையத் தலைவர் வாங் யி மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனி பிளின்கெனும் இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க இருவரும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாதிமாலாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இரண்டாவது சுற்றை எட்டியுள்ளது. முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்காததால் ஆகஸ்டு 20 அன்று, முதலிரண்டு இடங்களைப் பிடித்த வலதுசாரி வேட்பாளர் சான்ட்ரா டோரஸ் மற்றும் அரிவாலோ ஆகிய இருவருக்குமிடையில் போட்டி நடக்கிறது.