states

ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர வர்மாவை பழிவாங்கும் நரேந்திர மோடி அரசு!

புதுதில்லி, செப்.20- ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர வர்மாவை  பணிநீக்கம் செய்து ஒன்றிய அரசு வெளியிட்ட  உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் 1 வாரம் இடைக்  காலத் தடை விதித்து உள்ளது. குஜராத்தில் 2004-ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, இஷ்ரத்  ஜகான் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்  டார். அதாவது முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு சதி செய்த லஷ்கர்-இ-தொய்பா  பயங்கரவாத கூட்டத்தைச் சேர்ந்தவர் என முத்  திரை குத்தப்பட்டு, அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் துணை புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளால் இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இஷ்ரத் ஜகான் மரணம்  மோதலில் நிகழ்ந்தது அல்ல; மாறாக, திட்ட மிட்ட படுகொலை என்று, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட புலனாய்வுக் குழு 2011-இல்  உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்  செய்தது. இந்த புலனாய்வுக் குழுவில் இடம்  பெற்றவர்களில் ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர வர்மா முக்கியமானவர் ஆவார். அவர், எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி யுடன் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக இருந்  தார். இந்நிலையில், திடீரென அவரைப் பணி நீக்கம் செய்து அமித்ஷா தலைமையிலான ஒன்  றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட்  30-ஆம் தேதி உத்தரவிட்டது. இது வர்மாவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணி நீக்கத்திற்கு  எதிராக அவர்  தில்லி உயர்நீதிமன்றத்தை நாடி னார். அங்கு “ஷில்லாங்கில் வடகிழக்கு மின்  கழகத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு  அதிகாரியாக இருந்தபோது ஊடகங்களுக்கு  பேட்டியளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் துறை ரீதியிலான விசாரணையின் அடிப்  படையிலேயே வர்மா பணிநீக்கம் செய்யப்  பட்டுள்ளார்” என்று உள்துறை அமைச்சகம்  காரணம் கூறியது. உயர் நீதிமன்றமும், இதனை  ஏற்றுக்கொண்டது. அதேநேரம், இந்த விஷ யத்தில் வர்மா மேல்முறையீட்டுக்குச் செல்வ தற்கு ஏதுவாக, செப்டம்பர் 19 வரை அவகாசம் வழங்கியது.

இதையடுத்து, தன் மீதான பணி நீக்க உத்த ரவை சதீஷ் சந்திர வர்மா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதி மன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர  வர்மா சார்பில் கபில் சிபல் ஆஜராகி வாதாடி னார்.  அவர், “ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர  வர்மா டிஸ்மிஸ் வழக்கை உச்ச நீதிமன்றம் விசா ரிக்க வேண்டும், அல்லது உயர் நீதிமன்றம் இதில் உடனடியாக மேல் விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மேலும், “ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் சந்திர  வர்மாவின் பணிநீக்க வழக்கில் பணிநீக்கத்தை  தடை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் செப்டம்பர் 7-ஆம் தேதி இடைக்கால உத்த ரவு வழங்கி உள்ளது.

இதன் அடுத்த கட்ட விசா ரணை அடுத்த ஜனவரியில்தான் நடக்கும் என்  றும் தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக செப்டம்பர் 30-ஆம்  தேதியே சதீஷ் சந்திர வர்மாவின் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. எனவே, வர்மாவின் வழக்கை ஜனவரியில் விசாரிப்பது எந்த விதத்திலும் நியா யமாக இருக்காது.  சதீஷ் சந்திர வர்மா அவசர மாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவரின் மனுவை மட்டும் விசாரிப்பது மட்டும் தாமதமாக நடக்கிறது. இஷ்ரத் ஜகான் வழக்கில்  போலீஸ் என்கவுண்டர் தொடர்பான உண்மை களை வெளியிட்டதன் காரணமாக சதீஷ் சந்திர  வர்மா பழிவாங்கப்படுகிறார். இந்த வழக்கில் சிபிஐக்கு ஆதரவாக செயல்பட்டதால், அப்போதைய குஜராத் அரசு சதீஷ் சந்திர வர்மா மீது கோபமாக இருந்தது. அது இப் போது பழிவாங்குகிறது” என்று குற்றம் சாட்டி னார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கள், “வர்மா மீதான பணி நீக்க உத்தரவை ஒரு  வார காலத்துக்கு நடைமுறைப்படுத்தக் கூடாது” என்று தீர்ப்பளித்ததுடன், மேலும், “பணி நீக்க உத்தரவை எதிர்த்து தில்லி உயர்நீதி மன்றத்தில் வர்மா மனு தாக்கல் செய்யலாம். அவர் மீதான பணி நீக்க உத்தரவு மீதான இடைக்காலத் தடையை தொடரலாமா அல்  லது உத்தரவை ரத்து செய்யலாமா என்பதை  தில்லி உயர்நீதிமன்றமே முடிவு செய்யலாம்” என்று தீர்ப்பளித்துள்ளது.

;