states

வகுப்புவாதத்தின் கோரத் தாண்டவம்!

ஹரியானா அரசு கலவரத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்க ளின் வீடுகளை இடிக்க முடியாது! எந்த ஒரு கலவரமோ, வகுப்புவாத குழப்பமோ ஏற்பட்டால் இஸ்லாமிய சமூகத்தை ஒட்டுமொத்தமாக தண்டிப்பது என்ற எண்ணம் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் ஆட்சி நடைமுறையின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அந்த சமூ கத்தில் இருந்து கடைகள், வீடுகள் மற்றும் பல நிறுவனங்களையும் மிகவும் இயல்பான வகையில் இடித்துத் தள்ளுவது என்ற நடைமுறை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி மாநிலங்களில் பின் பற்றப்பட்டது. அந்த நடவடிக்கை தற்போது ஹரியானாவிலும் துவங்கிவிட்டது.

இன அழிப்பு நடவடிக்கை: நீதிமன்றம் கருத்து

குரு கிராம்,  நூஹ் ஆகிய இடங்களில் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களில் ஆறு பேர் பலியான விவகாரத்தில் அத்தகைய இடிப்பு நடவடிக்கையை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் தடுத்து நிறுத்தி உள்ளது ஒரு நல்ல அம்சம். இடிப்பு நடவடிக்கைகள் குறித்த விவகாரத்தை தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் “சட்ட ஒழுங்கு பிரச்சனை” எனும் போர்வையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் இடிக்கப்படுவது இன அழிப்பு நடவடிக்கை அல்லவா? என்றும் கேள்வி எழுப்பி யுள்ளது.மேலும் கட்டிடங்களை இடிக்க எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கப்பட வில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

கலவரத்தை தூண்டவே... 

நீதிமன்றத்தின் இந்த விவரிப்புகளை ஹரியானாவில் வாழும் அனைவரும் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். மற்ற மாநிலங்களில் ஒருவர் பார்த்த இடிப்புகளை பற்றி அதே சந்தேகத்திற்கு உரிய தெளி வற்ற செய்தியே ஹரியானாவிலும் முன்னுக்கு வந்துள்ளது. கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் சட்டப்பூர்வ நோக் கங்களுக்காக அகற்றப்படுவதாக அதிகாரி கள் வாதம் செய்கின்றனர். அரசியல் நோக்கங்களுக்காக கலவரத்தை தூண்டி விடவே இப்படிப்பட்ட இடிப்புகள்  அவர்க ளுக்கு எதிராக நடத்தப்படுகின்றது என்பது மிகத் தெளிவு. எந்த ஒரு செயல்முறையும் சட்டப்பூர்வ விதிகளும் பின்பற்றப்படாத சூழலில் இடிப்பு சட்டவிரோதமானது என்பதைப் புரிந்து கொள்ள அறிவு ஒன்றும் தேவை யில்லை. கலவரக்காரர்கள் என வகைப் படுத்திடவும் அவர்களின் கட்டிடங்களை அடையாளம் காணவும் எவ்விதமான நடை முறைகள் பின்பற்றப்படுகின்றன என தெரிய வில்லை. ஒரு கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் பொருட்களை அகற்றிட எவருக்கும் உரிமை இல்லை என்பதை அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. 

அடைக்கலம் கொடுத்த  வீடு இடிப்பு

ஏற்கனவே நிகழ்ந்த ஒரு வன்முறையின் போது ஒரு குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்த வீடு இடிக்கப்பட்ட உதாரணம் உள்ளது. சட்டத்திற்குப் புறம்பான முறை யில் தண்டனை நடவடிக்கைகளை சுமத்து வதற்கு வகுப்புவாத வன்முறையை ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்துவது எப்போ துமே பாரபட்சத்திற்கு தான் வழிவகுக்கும். தார்மீக நியாயத்திற்கான சமூக விரோத கூறுகள் இல்லாத நிலையில் அந்த உத்த ரவை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு இதற்காக எடுக்கப்படும் கட்டிடங்களில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிப்பதை தவிர வேறு வழியில்லை. “ஆக்கிரமிப்புகளை” இடித்துத் தள்ள நேரம் பார்த்து நிற்பதும் அதற்காக ஒரு கலவரம் நடைபெற காத்து நிற்பதும்தான் இதில் தெளிவாகிறது. அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு பிரிவினருக்கு துன்பத்தை ஏற்படுத்தும் இத்தகைய தீய செயல்முறை களை நீதித்துறை தலையீடு செய்து நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நன்றி : தி ஹிந்து (ஆங்கிலம்) தலையங்கம்:9.8.23, 
தமிழில்: கடலூர் சுகுமாரன்