states

விலைவாசி கடும் உயர்வு : மோடி அரசின் கொள்கைகளே காரணம் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சேலத்தில் போதை மற்றும் லாட்டரியை எதிர்த்துப் போராடிய வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். போதை மற்றும் சமூகவிரோதச் சக்திகளுக்கு காவல்துறையினர் தரப்பில் உதவி கிடைப்பதால்தான் சமூக விரோதிகள் அச்சமின்றி இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திண்டுக்கல், ஜுலை 13- மோடி அரசு அமலாக்கும் பொரு ளாதார கொள்கைகளின் விளைவாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் சாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் வியாழ னன்று தீக்கதிர் சந்தா வழங்கும் விழா  நடைபெற்றது.  இதில் பங்கேற்க வந்த  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 

விலைவாசி கடும் உயர்வு

ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்கிறது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசு இதைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி உற்பத்தி பரப்பளவு குறைந்தது. உற்பத்தியும் குறைந்தது. இதனால் தற்போது தக்காளி விலை  கிட்டத்தட்ட 300 விழுக்காடு உயர்ந்து விற்கப்படு கிறது. விலை குறைவது, விலை ஏறு வதை கட்டுப்படுத்துவதற்கு அரசு தலையிட்டு கொள்முதல் செய்து விநியோகம்  செய்ய வேண்டும். விவ சாயிகளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக் கும் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும். அதற்காக அரசு தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்க!

பருத்தி அறுவடை தமிழ்நாடு முழு வதும் நடைபெறுகிறது.  பருத்தி  குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது  போதுமான விலை இல்லை. ஒன்றிய அரசு விலையை அறிவிக்கிறது,  ஆனால் கொள்முதல் செய்யவில்லை. தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள். இது தொடர்பாக முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள் ளார். மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும். 

அதானி தில்லுமுல்லு - மோடி ஆதரவு  

மகாராஷ்டிராவில் தான் அதிகள வில் பருத்தி சாகுபடி நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தான் அதிக மான நூற்பாலைகள் உள்ளன. எனவே மாநில அரசே பருத்தியை கொள்முதல் செய்து அந்த நூற்பாலைகளுக்கு கொடுக்கலாம்.  இந்நிலையில் தனியார் வியாபாரிகள் பருத்தி விலையை கடுமையாக உயர்த்தி விற்கிறார்கள். எங்களால் பருத்தியை வாங்கி நூல்  நூற்க முடியவில்லை என்று 600க்கும் மேற்பட்ட சிறு தொழிலதிபர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்த தில்லுமுல்லு செய்வது  முழுவதும்  அதானி-அம்பானி போன்றவர்கள் நடத்தும் நிறுவனங்கள் தான். மோடி இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரி விக்கிறார். 

அரிசி கொடுக்க மறுப்பதா?

ஒன்றிய பாஜக அரசு மாநில அரசுகளுக்கு அரிசி கொடுக்க மாட்டேன் என்கிறது. உங்களுக்கு அரிசி தேவையென்றால் வெளி மார்க்கெட்டில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஒன்றிய அரசு. ஓபன் மார்க்கெட் செல்லிங் ஸ்கீம் என்று சொல்லக்கூடிய ஓ.எம்.எஸ்.எஸ்.தனியார் வியாபாரிகளுக்கு டெண்டர் விடுகிறார்கள். அவர்களு க்கு ஒன்றிய அரசு ஒரு கிலோ அரிசி ரூ.31க்கு கொடுக்கிறது. அவர்கள் நமக்கு ரூ.50க்கு விற்பார்கள். அத னால் விலை இல்லா அரிசியை மாநில அரசுகளால் கொடுக்க முடியவில்லை. நெல், கோதுமையை முறைப்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு  கொடுக்க வேண்டும். மாநில அரசு களுக்கு அரிசி கொடுக்க மாட்டோம் என்று சொல்வது பெரும் துரோக மாகும். 

அமித்ஷா - மோடி பின்புலத்தில் ஆளுநர்

ஆளுநரை எதிர்த்து விரிவான கடிதத்தை முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதியிருக்கிறார். அது நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அவ ரது எல்லா வகையான நடவடிக்கை களுக்கு  மோடியும், அமித்ஷாவும் பின்புலமாக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. 

மாடு மேய்க்க அனுப்புவது ஆர்.எஸ்.எஸ். 

பழனி பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆயிரம் பேருக்கு வேலை  கிடைக்கும். கோசாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?. ‘மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு’ என்று சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை.  சாதாரண தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சிப்காட் போன்ற நிறு வனத்திற்கு நல்ல வேலைக்கு போகக் கூடாது; இப்படியே ஆடு மாடு மேய்க்க  வேண்டும் என்பதற்காகத்தான் கோசாலை அமைக்க வேண்டும் என்கிறார் பாஜகவின் எச்.ராஜா.

கோவில்களில் பாஜக  அரசியல் வன்முறை

பழனி மலையில் கடந்த 2 ஆண்டு களாக முருகன் கோவிலை மையப் படுத்தி பாஜகவினர்அரசியல் செய்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். பழனி முருகன் ஆல யத்திற்கு  இந்து மதத்தினரைத் தவிர யாரும் வரக்கூடாது என்கிறார்கள். விஞ்ச்சில் ஏறக்கூடாது என்று தகராறு   செய்கிறார்கள். பழனியை போல  சிதம்பரம் நடராஜர் கோவிலையும் கல வர பூமியாக மாற்றுகிறார்கள். அமைதி யாக சாமி கும்பிடலாம் என்று வந்தால் அங்கும் அடிதடி தகராறு. பழனி, சிதம்பரத்தை வன்முறைக்களமாக மாற்றுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்  இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனி ருந்தனர்.    

            (ந.நி.)