states

img

சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சிலிண்டர் எரிவாயு உருளையின் விலை இன்று ரூ.50 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்க தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் சிலிண்டர் விலை அதிகரித்தது. பின்னர் விலை மாற்றமின்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் சமையல் எரிவாயு உருளை  விலை  ரூ.50 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக ரூ610க்கும் விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் இன்று முதல் ரூ.660க்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரு.56.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ரூ1466.60க்கு விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
இந்த விலை உயர்வுகொரோனா பெருந்தொற்றையடுத்து வறுமை, வேலையின்மையில் சிக்கி தவிக்கும் மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது.