சென்னை, பிப். 24- காரல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை யாக இருந்தன என்று ஆளுநர் ஆர். என்.ரவி கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், ஜெர்மானிய தத்துவ அறிஞர் காரல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானது என்றும், அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி யிருப்பது கண்டிக்கத்தக்கது. காரல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், காரல் மார்க்சின் கருத்துக்களை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை. மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொது வுடைமை தான் காரல் மார்க்சின் கொள்கை என விளக்கமளித் துள்ள ராமதாஸ், அவரின் கொள்கை களையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுவதாக தெரிவித் துள்ளார். பாமகவின் கொள்கை வழிகாட்டி களில் காரல் மார்க்சும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். காரல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறுகளை பரப்பக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர், அது அவருக்கு வழங்கப்பட்ட பணி யும் அல்ல என்றும், காரல் மார்க்ஸ் குறித்த தவறான விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.