states

கம்யூனிஸ்ட் விரோதிகளின் கனவு ஒரு நாளும் பலிக்காது - பெ.சண்முகம்

காவிரி டெல்டாவில் உள்ள விவசாய உறவுகள் உற்பத்தி முறைகள் குறித்தெல்லாம் கம்யூனிஸ்ட்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. ஏனென்றால், அங்கு வாழும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரம் ஆகியவற்றோடு இரண்டறக் கலந்து வாழ்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். அதற்காக, தியாகம் செய்தவர்கள், செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். எனவே, காவிரி டெல்டா மாவட்ட மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட்களை தனிமைப்படுத்தி விடலாம் என்ற கம்யூனிஸ்ட் விரோதிகளின் கனவு ஒருநாளும் பலிக்காது

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் கடந்த இருபது ஆண்டு  களுக்கு மேலாக நேரடி விதைப்பு முறையில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேட்  டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாத  போது உரிய காலத்தில் தண்ணீர் திறக்காதது,  தேவையான அளவு தண்ணீர் தொடர்ந்து தர  முடியாதது போன்ற காரணங்களால் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக போடப்  பட்டு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். நெல் உற்பத்தியில் மிகப்பெரும் சரிவு ஏற்பட் டது. இந்த சூழ்நிலையில் தான் நேரடி விதைப்பு  முறை புகுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இதை  வரவேற்றது. இப்போதும் காவிரி டெல்டாவின்  பல நூறு கிராமங்களில் நேரடி விதைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கேயும் எவ்வித பிரச்சனையும் இல்லை.  விவசாய உற்பத்தி முறையில் மாறுதல் ஏற்  பட்டிருக்கிறது. நடவு முதல் அறுவடை வரை  இயந்திரமயமாகிவிட்டது. விவசாய தொழிலா ளர்களுக்கு வேலை என்பது அரிதினும் அரிதாகி விட்டது. அதனால் அவர்கள் மாற்று வேலை யை தேடிச் சென்று விட்டனர். இளைஞர்கள் விவசாய வேலைக்கு வருவதை விட்டு இடம் பெயர்ந்து சென்று வேறு வேலைகளை செய்து  வருகின்றனர். லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டு ஒரு சில கம்பெனிகாரர்களும், இயந்தி ரங்களை வாடகைக்கு இயக்கக்கூடிய சில நூறு பேர்களும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்கும், விவசாய தொழி லாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற் படவோ, மோதல் உருவாகவோ காரணமாக விவசாயம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. இது  தான் இன்றைய காவிரி டெல்டாவின் எதார்த்த நிலை, இதை அறிந்தும், உணர்ந்தும் இருப்ப வர்கள் தான் கம்யூனிஸ்ட்கள். 

எனவே, காவிரி டெல்டாவில் உள்ள விவ சாய உறவுகள் உற்பத்தி முறைகள் குறித்தெல் லாம் கம்யூனிஸ்ட்களுக்கு எவரும் பாடம் எடுக்க  வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. ஏனென்றால், அங்கு வாழும் மக்களின் அரசி யல், சமூக, பொருளாதாரம் ஆகியவற்றோடு  இரண்டறக் கலந்து வாழ்பவர்கள் கம்யூ னிஸ்ட்கள். அதற்காக, தியாகம் செய்தவர்கள், செய்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். எனவே, காவிரி டெல்டா மாவட்ட மக்களிடமிருந்து கம்யூ னிஸ்ட்களை தனிமைப்படுத்தி விடலாம் என்ற  கம்யூனிஸ்ட் விரோதிகளின் கனவு ஒருநாளும்  பலிக்காது என்பதை அத்தகைய எண்ணங் கொண்ட நபர்களுக்கு தெரிவித்துக் கொள்வது  நமது கடமை.

மூலகாரணம் என்ன?

ஏனென்றால், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் பருத்திக்குடி கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை உண்மை விபரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமலே, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட்கள் விவசாயி களின் விரோதிகள் என்ற அளவுக்கு சித்த ரிக்கின்றனர். துரும்பு கிடைத்தாலும் அதை தூணாக்கி கம்யூனிஸ்ட்களை தாக்குவது என்ற  விரோத மனப்பான்மை தான் இதில் வெளிப்படு கிறதே தவிர, பிரச்சனைக்கான மூல காரணத்தை அறிந்து கொள்ளவோ, அதற்கு தீர்வு காணவோ அவர்கள் தயாராக இல்லை. 

பருத்திக்குடி கிராமத்தில் மொத்தம் 16 வேலி நிலம் உள்ளது. இது பத்து விவசாயி களுக்கு சொந்தமானது. நிலம் முழுவதும் பட்டி யல் சாதி மக்களின் குடியிருப்புகளை ஒட்டியே  உள்ளது. காவிரி நீரை விட நிலத்தடி நீரை பயன்படுத்தி முப்போகம் விளைவிக்கும் பகுதி  இது. ஆனால், மூன்று விவசாயிகளை தவிர மற்ற  விவசாயிகள் நிலத்தை தரிசாக போட்டிருக்கி றார்கள். இந்த மூன்று விவசாயிகளும் இதுவரை நேரடி விதைப்பு முறையில் பயிர் செய்தவர்கள் அல்ல! ஏனென்றால் போதுமான நீர்வளம் இருப்  பதால் பழைய முறைப்படி நாற்றுவிட்டு, நடவு செய்வது என்பதைத்தான் கடைப்பிடித்து வந் தார்கள். இந்த ஆண்டு மேட்டூர் அணை பாச னத்திற்கு முன்கூட்டியே திறக்கப்பட்டு கடை மடைவரை தண்ணீர் சேர்ந்து தொடர்ந்து தண்  ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் திடீரென்று  தெளிப்பு முறையில் நெல்விதைக்கிறோம் என்று முனைந்தது விவசாய தொழிலாளர் களுக்கு வேலை தரக்கூடாது என்ற உள்நோக்  கத்துடன் தான் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதற்கான மூலகாரணம் என்ன? பட்டியல் சாதி மக்கள் காளியம்மன் கோவில்  ஒன்றை கட்டி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். கடந்த பன்னி ரெண்டு ஆண்டு காலமாக உயர்சாதி என்று சொல்லக்கூடிய சமூகத்தை சார்ந்தவர் தான் கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். ஆண்டு தோறும் சாமி பல்லக்கில் வீதியுலா வரும் போது  உயர்சாதியினர் வசிக்கக்கூடிய தெருவழியாக கொண்டு செல்வது தான் வழக்கம். இந்த ஆண்டு அப்படி வரும் போது, சில இளைஞர்கள் தாழ்ந்த  சாதிக்காரர்களின் சாமி எங்கள் தெருவுக்குள் வரக்கூடாது என்று தகராறு செய்கிறார்கள். காவல்துறையில் புகார் செய்யப்படுகிறது. ஆனால் ஐந்து தலித் இளைஞர்களை காவல் துறை கைது செய்கிறது. சாமி ஊர்வலத்தை தடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 

கோட்டாட்சியரின் அறிவுரையை மீறி

மேலும் பட்டியல் சாதி மக்களுக்கு யாரும் வேலைதரக் கூடாது. மளிகைக் கடைகளில் பொருட்கள் தரக்கூடாது. டீக்கூட தரக்கூடாது என்று ‘உயர்சாதி’யைச் சேர்ந்தவர்கள் ஊர்க்  கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை எப்படி வேடிக்கை பார்த்துக்  கொண்டு இருக்க முடியும்? முறைப்படி மீண்டும்  காவல்துறையில் புகார் செய்யப்படுகிறது. காவல்துறையினர் 107 வழக்கு போட்டு  கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்படு கிறது. கோட்டாட்சியர் விசாரணை நடை பெற்றது.  அதில் “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மளிகைக் கடைகளில் பொருட்கள் தரக்கூடாது. டீ தரக்கூடாது என்று தடைவிதிப்பது தவறு என்றும் கூலி தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் வேலை தர வேண்டுமென்றும் இது போன்ற சமூக ஒடுக்குமுறை செய்வது தவறு என்றும் எச்சரிக்கை செய்து ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தினார். ஆனால், இதனை தங்க ளுக்கு ஏற்பட்ட அவமானமாகவும், தோல்வி யாகவும் கருதிய சாதிய மேலாதிக்க சக்திகள் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை தரக் கூடாது. அவர்களை பட்டினி போட்டால் தான்  புத்தி வரும் என்ற தீயநோக்கமும், சாதிய ரீதி யாக பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் தான் வழக்கத்திற்கு மாறாக நேரடி விதைப்  புக்கு சென்றதற்கான அடிப்படை. கோட்டாட்சி யர் உத்தரவுப்படி வேலை தர வேண்டும் என்று சென்ற போது தான் காவல்துறைக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு விவசாய தொழிலாளர்கள் 6 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போது அந்த கிராமத்தில் 144 தடை உத்தரவு போடப்  பட்டுள்ளது. காவல்துறையின் பாதுகாப்புடன் மீண்டும் அந்த விவசாயிகள் நேரடி விதைப்பை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையை கண்டிக்காமல் கம்யூனிஸ்ட்டுகளை குறை கூறுவதா?

சாதீய ஒடுக்குமுறையை முற்றிலும் மூடி மறைத்துவிட்டு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட சாதி மேலாதிக்க சக்திகளின் செயல்  களுக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்  துறையினரின் அணுகுமுறையை கண்டிக்கா மல், வேலை கேட்ட விவசாய தொழிலாளர்கள்,  அவர்களுக்கு ஆதரவாக சென்ற கம்யூ னிஸ்ட்கள் மீது குற்றம் சுமத்துவது நியாயமா  என்ற கேள்வியை நியாய உள்ளம் படைத்த வர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.  தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் அக்  கிராமத்தில் சுமூகமான நிலையை ஏற்படுத்த வும், சகஜமான வாழ்க்கையை அக்கிராமத்தில் வாழும் அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தடையுத்தரவை விலக்கி சமா தானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் சாதீய ஒடுக்குமுறை எந்த வடிவத்தில்  அமல்படுத்தப்பட்டாலும் அதை ஏற்க முடியாது. எனவே, காலந்தாழ்த்தாமல் பாரபட்ச மின்றி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். 

நாடு தழுவிய அளவில் விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் முன்னணியில் செயல்படுவது செங் கொடி இயக்கம். ஒன்றிய பாஜக அரசின் விவ சாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக  சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வருவதை  நாடறியும். அந்த முயற்சியின் விளைவாகத் தான் ஓராண்டு காலத்திற்கு மேலாக விடாப்  பிடியான போராட்டத்தை நடத்தி இந்திய விவ சாயிகளின் முன்னால், மோடி அரசாங்கத்தை மண்டியிடச் செய்ததில் முக்கிய பங்கு செங்  கொடி இயக்கத்திற்கு உண்டு என்பதை எவரா லும் மறக்க முடியாது. அந்தப் பாதையில் செங்  கொடி இயக்கம் வெற்றி நடைபோடும். ஈசல் போல் தோன்றி மறையும், சில விவசாய சங்கங்  கள் எல்லாம் இந்திய விவசாயிகளின் எதிரி களாக கம்யூனிஸ்ட்களை சித்தரிக்கும் முயற்சி யை கைவிட்டு விவசாயிகளிடமிருந்து விவ சாயத்தை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்ப டைக்க துடிக்கும், விவசாயிகளுக்கு கொடுத்த  வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக களம் காண  வாருங்கள். அது தான் இன்றைய தேவை.