states

img

தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்புகள்!

சென்னை,அக்.26- தீபாவளி பண்டிகையை முன் னிட்டு, இனிப்புகள் தள்ளுபடி விலை யில் விற்பனை செய்யப்படும் என்று  ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு,  குலோப்ஜாம், ரசகுல்லா, லஸ்ஸி,  மோர், சாக்லேட், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருள் களைத் தயாரிப்பது ஆவின் பால கங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு, ஆவின் பால் உபபொருட்கள் ஆவின்  பாலகங்கள், முகவர்கள் மூலம் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி விநியோ கம் செய்ய அனைத்து நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு தீபாவளியை  முன்னிட்டு, கடந்த ஆண்டை விட  கூடுதலாக 20 விழுக்காடு விற்ப னையை அதிகரிக்க ஆவின் நிறுவ னம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், இனிப்புகள், கார  வகை அடங்கிய மூன்று காம்போக் களை ரூ. 300, ரூ.500 மற்றும் ரூ.900 என  தள்ளுபடி விலையில் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனுடன் ‘கேரி பேக்’ வழங்கப் படும் என்று விளம்பரம் செய்யப்பட்ட தற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மஞ்சப்பை அளிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.