காத்மண்டு, பிப். 22 - நேபாள நாட்டின் பஜூரா பகுதியில் புதனன்று மதியம் ரிக்டர் அளவு கோலில் 5.2 ரிக்டர் அளவில் பலத்த நில நடுக்கம் ஏற்பட்டதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள் ளது. கடந்த 2 வார காலங்களாக இந்தி யாவின் வடபகுதி மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுவரும் நிலையில், இமாச்சல், உத்தரகண்ட் பகுதிகளில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட லாம் என என்ஜிஆர்ஐ எச்சரிக்கை விடுத் திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.