states

மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்

சென்னை, ஜூலை 26- இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலி யுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டா லின் கடிதம்எழுதியுள்ளார். இருப்பினும் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு, இலங்கை அதிபர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனை குறித்து பிரதமர் விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும், மீனவர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுக்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வா தாரங்களை மதிக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதுக்கும் இலங்கை அதிபருடனான சந்திப்பு வழிவகுக்கும் என  தாம் நம்பியதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உயர்மட்ட அள விலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது  2 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் ஜூலை 24 அன்று சிறை பிடிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப் பட்டதால், கடும் இன்னல்களை சந்தித்து வருவ தாகவும், இந்தச் சம்பவங்கள் இருதரப்பு உறவு களை சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு கடுமையான சமூக-பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீன வர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப் பட்ட அவர்களின் படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கவும் கேட்டுக் கொண்டுள்ள முதல்வர், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமை களைப் பாதுகாக்க, இருதரப்பும் ஏற்றுக்கொள்ள க்கூடிய நிரந்தரத் தீர்வு காணவேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.