states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வீட்டின் மீது மோதி கவிழ்ந்த லாரி உ.பி.யில் 8 பேர் பலி

சாலையோர வீட்டின் மீது மோதி  லாரி கவிழ்ந்ததால் வீட்டிற்கு  வெளியே உறங்கிய ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில்  அரங்கேறியுள்ளது. ஹர்தோய் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள  வீட்டின் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தூங்கினர். புதனன்று அதிகாலை  தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மணல் லாரி கவிழ்ந்தது. இந்த கோர  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8  பேர் உயிரிழந்தனர். 5 வயது சிறுமி ஒரு வர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 பேரில் 5 பேர் தூக்கத்திலேயே என்ன நடந்  தது என்பது தெரியாமல் உயிரிழந்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் பாஜக எடியூரப்பாவை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு

தென்னிந்திய பாஜகவின் முக்கிய  தலைவரும், கர்நாடக முன்  னாள் முதல்வர் எடியூரப்பா வின் வீட்டிற்கு கடந்த பிப்ரவரி 2 அன்று  கல்வி தொடர்பாக உதவி கேட்க பெண்  ஒருவர் தனது மகளுடன் சென்றுள்ளார். அடுத்த சில நாட்களில் மீண்டும் அதே  பெண் எடியூரப்பாவிடம் உதவி கேட்க  சென்ற பொழுது, தனது 17 வயது மகளிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி  பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலை யத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்  தார். இந்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிறுமியின் தாயார் திடீர் மரணம் இந்நிலையில், எடியூரப்பா மீது பாலி யல் புகார் அளித்த சிறுமியின் தாயார் திடீ ரென மரணம் அடைந்தார். இது கடும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனி டையே சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் எடியூரப்பாவைக் கைது செய்  யக் கோரி சிறுமியின் தாத்தா - பாட்டி, கர்  நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், எடியூரப்பாவை பாலி யல் வழக்கில் விசாரணைக்கு அழைத்து  சம்மன் அனுப்பியுள்ளது சிறப்பு புல னாய்வுக் குழு. இந்த சம்மனுக்கு  எடி யூரப்பா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது  செய்யப்படலாம் என தகவல் வெளியாகி யுள்ளது.

மாதர் சங்கத்தின் மத்தியக் குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடக்கிறது

புதுக்கோட்டை, ஜூன் 12- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக் குழு கூட்டம், ஜூலை  12, 13, 14 ஆகிய தேதிகளில் புதுக்கோட்  டையில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்புக் குழு அமைப் புக் கூட்டம், புதுக்கோட்டையில் செவ்  வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச் செல்வி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா, மாநி லத் துணைச்செயலாளர் எஸ்.கே. பொன்  னுத்தாய், கந்தர்வக்கோட்டை தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்ன துரை, புதுக்கோட்டை நகர்மன்றத் தலை வர் திலகவதி செந்தில், சிபிஎம் மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட் டோர் பேசினர். வரவேற்புக் குழுத் தலைவராக சந்  திரா ரவீந்திரன், செயலாளராக பி.சுசிலா,  பொருளாளராக கி. ஜெயபாலன், துணைத் தலைவர்களாக அ. மணவா ளன், ஜெ.வைகைராணி, துணைச் செய லாளர்களாக டி. சலோமி, எஸ். பாண்டிச்  செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னதாக மாவட்டச் செயலாளர் பி. சுசிலா வரவேற்க, பொருளாளர் ஜெ.  வைகை ராணி நன்றி கூறினார்.

குறுக்கே வந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
10 நாட்களில் முடியும் சட்டமன்ற கூட்டத் தொடர்!

சென்னை, ஜூன் 12 - தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம், ஜூன் 20 அன்று துவங்கி 29 வரை நடை பெறும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 24 அன்று துவங்கும் என்று அறிவித்திருந்த சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, திடீரென அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, 4 நாட்கள் முன்னதாக ஜூன் 20-ஆம் தேதியே சட்டமன்றம் கூடும் என்றும், எனினும், கூட்டத்தொடரை எத்  தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத் திற்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி புதனன்று (ஜூன் 12) தலை மைச் செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு  கூடியது. இதில், சட்டப்பேரவையில் பிரதி நிதித்துவம் பெற்றுள்ள கட்சிகளின் தலை வர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்டத்  தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்து வது என்று ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேரவைத் தலை வர் மு. அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்  தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 20  முதல் 29 வரை நடைபெறும் என்று அறிவித்தார்.  ஒத்திவைப்பு மேலும், “முதல் நாளான ஜூன் 20 அன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டப் பேரவை, மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினர் நா. புகழேந்திக்கு இரங் கல் தெரிவித்த பின் ஒத்திவைக்கப்படும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் மு. அப்பாவு, “விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் ஆணையம் தடாலடியாக இடைத்தேர்தல் அறிவித்து விட்டது. தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் முடிந்து சுமார் 45 நாட்க ளுக்கு பிறகுதான் இறுதிக் கட்ட தேர்தலை  நடத்தி முடித்தது. இந்த இடைப்பட்ட காலத் தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், அதைச் செய்ய தவறிய தேர்தல்  ஆணையம், காலம் கடத்தி வந்தது. இப்போது திடீர் என்று இப்போது இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது. இதனால், 24-ஆம் தேதி துவங்க வேண்டிய சட்ட மன்ற கூட்டம் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி  காலை, மாலை நேரங்களில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார். “தேர்தல் ஆணையத்தின் இந்த அலட்சியம் குறித்து, எந்த பத்திரிகையும் ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை” என்றும் அப்பாவு குறிப்பிட்டார். ஜூன் 21 முதல் தினமும் காலையில் 9.30 மணிக்கு துவங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், பிற்பகல் 1.30 மணி வரை யும், பின்னர் பிற்பகல் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும். 1996 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் காலை யில் 9.30 மணிக்கு பேரவைக் கூட்டம்  நடத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் சட்டமன்றம் கூடியிருக்கிறது. அதே போல் 2006 ஆம் ஆண்டில் நடை பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டில் அதிமுக  ஆட்சியின்போது மக்களவைத் தேர்தல் முடிந்ததும், சட்டமன்றக் கூட்டம் நடத்தப்  பட்டது. அன்றைக்கு மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் வெறும் 6 நாட்கள் மட்டுமே நடந்தது. 13 மசோதாக்களை விவா தம் நடத்தாமல் ‘கில்லட்’ நேரம் கொடுத்து நிறைவேற்றிய வரலாறும் உண்டு. ஆனால், இன்றைய முதலமைச்சர் எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் மானி யக் கோரிக்கையாக இருந்தாலும் விவா தம் நடத்தாமல் நிறைவேற்றக் கூடாது  என்று கூறியுள்ளார். எனவே, அதன்படி,  விவாதம் நடைபெற்று நிறைவேற்றப் படுகிறது என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி அறிக்கை பி.டெக்., படிப்பிற்கான கால அளவு குறைப்பு!

சென்னை,ஜூன் 12- சென்னை ஐஐடியில் பி.டெக்., பாடநெறி காலஅளவு சீர மைக்கப்பட்டு, பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436  மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாகக் குறைக்கப்பட்  டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி அறிக்கை வெளி யிட்டுள்ளது. “சென்னை ஐஐடி மாணவர்களுக்கு நவீன மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பாடத்திட்டத்தின் தேவை, நெகிழ்வுத் தன்மை யின் அடிப்படையில் இந்தியாவுக்கான பி.டெக். பாடத் திட்  டத்தை ஐஐடி நிறுவனம் மீண்டும் உருவாக்கியுள்ளது.  வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில் முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனத்தின் பாடத் திட்ட பணி குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து  இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பி.டெக். படிப்பின் 2ஆம் ஆண்டிலேயே முன்னெப்போ தும் இல்லாத அளவுக்கு நெகிழ்வுத் தன்மை, இடைநிலை கற்றல் அதிகரிப்பு, செயல்திட்டங்கள், தொழில் முனைவோர்  வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கும் வகையில் கல்வி அமைப்பை இந்தக் கல்வி நிறுவனம் புதுப்பித்துள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாண வர்கள் அளித்த விரிவான கருத்துகளுக்குப் பின் பி.டெக். பாட நெறி கால அளவு சீரமைக்கப்பட்டு, பட்டப் படிப்புக்கான கால  அளவு நேரம் 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரம்  குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில்முறை மற்றும் தொழில் முனைவு சாத்தியக்கூறுகளை மாணவர்கள் ஆராய்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

;