states

போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிவரும் குஜராத்

ஆமதாபாத், அக்.8- குஜராத் கடற்கரைப் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெரா யினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய் யப்பட்டது.  குஜராத் கடற்கரைப் பகுதியில், சர்வ தேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் குஜ ராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி கள் சோதனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்குச் சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது. அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.350 கோடி ஆகும். இதனையடுத்து அந்த படகையும், அதில் இருந்த ஆறு பேரையும் ஜகாவு பகு திக்கு விசாரணை நடத்த அழைத்து வந்த னர். கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், இவ்வாறு சோதனை நடத்துவது, இந்தாண் டில் மட்டும் ஆறாவது முறையாகும். இதற்கு முன் கடந்த 14-ஆம் தேதி நடந்த  சோதனையில் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு  சிக்கியது. அதில் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெள்ளியன்று கேரளம் மாநி லம் கொச்சி கடற்கரைப் பகுதியில் போதை  மருந்து தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடு பட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இட மான வகையில் வந்த படகை தடுத்து நிறுத்தி  சோதனை நடத்தினர். அதில், ஈரானைச் சேர்ந்த  ஆறு பேர் இருந்துள்ளனர். மேலும், அந்தப்  படகில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 200 கிலோ  ஹெராயின் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். படகில் இருந்தவர்களில் 4 பேர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். மற்றொ ருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறு திப்படுத்தப்படவில்லை. இந்த ஹெராயின், ஆப்கனில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரி விக்கின்றன. இந்தக் கடத்தலில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் உள்ள தாக அதிகாரிகள் கூறினர். 

செங்கற்களில் கொக்கைன்

மகாராஷ்டிரா மாநிலம் நவாஷேவா  துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தென் ஆப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து கொண்டு வரப்பட்ட பேரிக்காய். பச்சை ஆப்பிள்கள்   நிரம்பிய கண்டெய்னரை சோதனை செய்தனர்.  பெட்டிக்குள் விலை உயர்தர கொக்கைன் மற்றும் ஒரு கிலோ எடையுள்ள ஏராளமான செங்கற்கள் இருப்பதை கண்டறிந்தனர். அந்தக் கற்களை உடைத்தபோது அதில்  50.23 கிலோ கொக்கைன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இறக்குமதி செய்தவரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்  யப்பட்ட கொக்கைனின் மதிப்பு கள்ளச்சந் தையில் ரூ.502 கோடி இருக்கும் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் போதைப்பொருள் கடத்தல் மையமாக ஆகியுள்ளது என்பதை கடத்தல்காரர்கள் தொடர்ந்து நிரூபித்து வரு கின்றனர். கடல் வழியைப் பயன்படுத்தி இந்தியா விற்கு போதைப்பொருள் கடத்திய எட்டு வழக்குகளில் 28 பாகிஸ்தானியர்களைப் பிடித்து, ரூ.6,350 கோடி மதிப்பிலான சுமார் 1,300 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.