states

பருவநிலை அச்சுறுத்தல்களுக்கு பணக்கார நாடுகளே காரணம்

வளரும் சிறிய தீவு நாடுகளின் நான்காவது சர்வதேச மாநாடு மே 27 துவங்கி 30  வரை ஆண்டிகுவா மற்றும் பார்புடா தீவில் நடைபெற்று வருகிறது. தாங்கள் எந்த வகையிலும் காரணம் இல்லாத பருவநிலை நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டத்தில் சிறு வளரும் தீவு நாடுகள்தான் முன்னணியில் நிற்கின்றன என்று சிறு தீவுகள் மாநாட்டை நடத்தும் ஆண்டிகுவா  மற்றும் பார்படாவின் பிரதமர் காஸ்டன் பிரவுன் கூறினார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் எச்சரிக்கை அளவான1.5  டிகிரி சென்டி கிரேட் வெப்பநிலை உயர்வை உலகம் நெருங்கி வருகிறது. இதனால் நெருக்கடிகள் அதிகரித்து  காலநிலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கால நிலை சீர்கேட்டிற்கு  முக்கிய காரணமான பணக்கார நாடுகள் அதன் விளைவுகளை தணிக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற தவறிவிட்டனர்.இதனால் பொதுவாக நம் உலகிற்கும் குறிப்பாக வளரும் சிறு தீவு நாடுகளுக்கும் தீங்கு விளைகிறது. காலநிலை நெருக்கடி நம் அனைவரையும் அழித்து விடும் என சீசன் தீவின் ஜனாதிபதி ராம் கலவன் எச்சரித் தார். இன்றோ நாளையோ நாமும் பாதிக்கப்படும் நேரம் மிக விரைவில் வருகிறது என்றும் அவர் எச்சரித்தார். கரீபியனிலிருந்து  பசிபிக் வரை ஒருபுறம் உயர்ந்து வரும் கடல் மட்டம்; மறுபுறம் அதிகரிக்கும் வெளிநாட்டு கடன்களுக்கு இடையே சிக்கி பல சிறிய தீவு நாடுகள் சீர்குலைந்து வருகின்றன. வெளிப்புற அதிர்ச்சிகளால் பாதிக்கப்படுவதோடு இறக்குமதியை மட்டுமே நம்பி  மக்கள் வாழும் நாடுகளாகவும் இவை மாறியுள்ளன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளான கொடூரமான வறட்சிகள், சக்தி வாய்ந்த சூறாவளிகள் மற்றும் உயரும் கடல் மட்டங்கள் இத்தகைய நாடுகளை உலகின் வரைபடத்தில் இருந்தே அழிக்கும் ஆபத்தை  ஏற்படுத்துகிறது. எழுந்து வரும் அலைகளின் கீழ் எந்த நாடும் அல்லது கலாச்சாரமும் காணாமல் போவதை நாம் ஏற்க  முடியாது என்று கூறிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனி குட் டிரஸ் சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும் அடிப்படையான கடமையும் நமக்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார். புதை வடிவ எரி  பொருட்களை லாபம் ஈட்ட பயன்படுத்தும் பொழுது ஒரு  சிறிய தீவு மாநிலம் முழுவதும் அழிந்து போகும். பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையேயான இதற்கான போட்டி மிகவும் அவலமானது என்றும் அவர் குறிப்பிட்டார். நீலப் பொருளாதாரம் புதை வடிவ எரிபொருட்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது நம்முடைய செலவுகளை உயர்த்தும். இதற்கு மாற்று கண்டுபிடிக்காவிடில் மனித வாழ்வுக்கு மிக மோசமான விலையை கொடுக்க வேண்டி வரும் என்று மார்ஷல் தீவுகளின் தலைவர் ஹில்டா ஹெய்ன்   எச்சரித்தார். காலநிலை பாதிப்பு நிதி உதவி குறித்து ஐநா உறுதி  மொழிகளை நிறைவேற்றுவதில் வல்லரசு நாடுகள் வேக மும் அக்கறையும் காட்டுவதில்லை. 65 மில்லியன் மக்கள் தொகையை உள்ளடக்கிய 39 சிறிய  தீவு நாடுகளின் இந்த சர்வதேச  மாநாட்டின்  நிகழ்ச்சி நிரலில் இது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

சிறிய வளரும் தீவு நாடுகளுக்கு சுமார் 4.7 முதல் 7.3  பில்லியன் டாலர் பருவநிலை பாதிப்புக்கான நிதி தேவை படுவதாக ஐநாவின் வளர்ச்சித் திட்டம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலான சிறிய தீவு மாநிலங்கள் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், அதற்கு மேற்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது உலகின் ஏழை நாடுகளுக்கு கிடைக்கும் சர்வ தேச நிதி உதவியும் முன்னுரிமை நிதியும் அவர்களால் பெற முடியாமல் போனது. சர்வதேச சமூகத்தின் நிதி உதவி என்னும் பாதுகாப்பு வலையை அவர்கள் பெற முடியாமல் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை யின் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) தலைவர் அச்சிம்  ஸ்டைனர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளை மேம்படுத்து வது, மற்றும் கடல் பாதுகாப்பு - நீல பொருளாதாரம் என அழைக்கப்படுவதில் ஈடுபடுவது ஆகியவை சிறு  தீவு வளரும் நாடுகளின் முன்னுரிமைகளாக மாறி உள்ளன. உலகின் பிரத்தியேக பொருளாதார மண்ட லங்களில் இதன் பங்கு 19 சதவீதமாக அதிகரித்து வருகிறது.  இத்தகைய சிறு தீவு நாடுகளுக்கு ‘ஸ்கூபா டைவர்ஸ்’ என்று சொல்லக்கூடிய  கடலுக்கு அடியில் நீந்துபவர்கள் அதிகமாக வருகிறார்கள். இது  பல்லுயிர் மற்றும் பவளப்பாறைகள் மீது காலநிலை சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இத்தகைய பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு சுற்றுலாத்துறையும் இங்கே மேம்படுத்திட முடியும். நன்றி: டெக்கான் கிரானிக்கல், 29/5/24. - தமிழில்: கடலூர் சுகுமாரன்