சென்னை, ஜூலை 4 - பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட தற்கு மாறாக நிர்வாகம் செயல்படுவதாக சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் விமர்சித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்திருந்தது. இதன்மீது 5வது கட்ட சமரச பேச்சு வார்த்தை செவ்வாயன்று (ஜூலை 4) டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. தனித் துணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில், போக்குவரத்து கழக அதிகாரிகள், அனைத்து சங்க கூட்டமைப்பில் உள்ள சிஐ டியு உள்ளிட்ட 8 சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதன்பிறகு சிஐடியு தலைவர் அ.சவுந்தர ராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓட்டுநர் பணியிடத்தை தொடர்ந்து நடத்து நர், தொழில்நுட்ப ஊழியர்கள், அலுவலக ஊழியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை கள் வெளியிடப்படும்;
வாரிசு வேலை வழங் கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 90 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், அமலாக்கப்படாமல் உள்ள ஒப்பந்த சரத்துகளை செயல்படுத்த வேண் டும். கொரோனா கால ஊக்கத்தொகை வழங்குவதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி உள்ளோம். பேச்சுவார்த்தையில் காலதாமதம் செய்வதன் மூலம் தொழிலாளர்களின் உரி மைகள் பறிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தை யில் ஒப்புக் கொண்டதற்கும்,தொழிலாளர் துறை அறிவுறுத்தலுக்கும் மாறாக நிர்வாகம் செயல்படுகிறது. ஏமாற்றப்படுகிறோம் என்ற உணர்வு எழும் நிலையில் வேலைநிறுத்தத் திற்கு செல்வோம். அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஜூலை 18ந் தேதி நடைபெறும் என்று ஆணையர் எங்களிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், துணை பொதுச்செயலாளர் வி.தயானந்தம், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.