சென்னை, ஜன.16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் சாமி நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வன விலங்குகளால் தாக்கப் பட்டு உயிரிழப்பவர்களுக்கு மாநில அரசின் சார்பில் உயிரிழந்த குடும் பங்களுக்கு நிவாரணமாக இது வரை மாநில அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவானது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி பல இயக்கங்களை நடத்தியுள்ளோம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வனவிலங்குக ளால் தாக்கப்பட்டு மனித உயி ரிழப்பு ஏற்பட்டால் அந்த குடும்பங் களுக்கு பத்து லட்சம் ரூபாய் வழங் கப்படும் என அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் வரவேற்கிறோம். வனவிலங்குகளால் தாக்கப் பட்டு உயிரிழக்கும் குடும்பங்க ளுக்கு இது பேருதவியாக அமை யும். இந்த தொகையை காலம் தாழ்த்தாமல் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் வழங்குவதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும் ஏற்கனவே தமிழ்நாடு முழு வதும் வனவிலங்குகளால் தாக்கப் பட்டு உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணத் தொகை தற்போது வரை வழங் கப்படாமல் நிலுவையில் உள்ளது. இவர்களுக்கும் தற்போது அரசு அறிவித்துள்ள ரூபாய் 10 லட்சம் வழங்கிடுவதற்கான நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக நீலகிரி மாவட்டத் தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட வர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை இதுவரை கிடைக்கப் பெறாமல் உள்ளதை அரசு கவ னத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வனவிலங்குகளால் தாக்கப் பட்டு உயிரிழந்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தற்போது தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள ரூ. 10 லட்சம் என்ற அடிப்படையில் வழங் கிட வேண்டும்.