states

டிசம்பருக்கு முன்னதாகவே ரெப்போ விகிதங்கள் உயரலாம்!

அமெரிக்க டாலரின்  வலிமையை, பிற முன்னணி நாணயங்களோடு ஒப்பிட்டு கணக்கிடப்படும் அமெரிக்க டாலர் குறியீடு (US DOLLAR INDEX) 112.10 ஆக உயர்ந்தது. இதனால், டாலருக்கு எதிரான அனைத்து முன்னணி நாணயங்களும் வெள்ளியன்று சரிவைப் பதிவு செய்தன. இந்தப் பட்டியலில் இந்திய ரூபாயும் இருப்பதால், ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின்  அடுத்தக் கூட்டம் டிசம்பர் மாதத்தில்தான் நடைபெறும். ஆனால், அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி முன்கூட்டியே தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.  ரிசர்வ் வங்கி இதற்கு முன்பு 25 முதல் 35 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 75 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்த லாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.